2025 ஆம் ஆண்டுக்கான Global State of Democracy அறிக்கையில், 2024 ஆம் ஆண்டு நடைபெற்ற அமைதியான மற்றும் நம்பகமான தேர்தல்களின் காரணமாக ‘மக்கள் பிரதிநிதித்துவம்’ பிரிவில் இலங்கை 15 இடங்கள் உயர்ந்துள்ளது.
மேலும், சட்டத்தின் ஆட்சி மற்றும் ஊடகச் சுதந்திரம் ஆகிய துறைகளிலும் முன்னேற்றம் காணப்பட்டுள்ளதாக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. பரவலான ஜனநாயக சரிவை எதிர்கொண்டு வரும் பிராந்தியத்தில் இலங்கை தனித்துவமான முன்னேற்றம் கண்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

