இலங்கை முழுவதும் 50 நீதிமன்றங்களில் குழந்தை சாட்சியறைகள் அமைக்கும் திட்டத்தை நீதி அமைச்சகம் அறிமுகப்படுத்தியுள்ளது.
குழந்தைகள் நட்பு நீதித்துறை அமைப்பை உருவாக்கும் நோக்கில் எடுக்கப்பட்ட இந்த முக்கியமான முயற்சியின் முதல் நிலையம் கண்டி மேல் நீதிமன்றத்தில் நீதி அமைச்சர் ஹர்ஷனா நானாயக்காரவால் திறந்து வைக்கப்பட்டது.
இந்த அறைகள் நவீன ஒலி-ஒளி தொழில்நுட்பத்துடன் அமைக்கப்பட்டுள்ளன. இதன் மூலம் குழந்தைகள் நேரடியாக நீதிமன்றத்தில் ஆஜராகாமல் தனியிடத்திலிருந்தே சாட்சி அளிக்க முடியும். இதனால் அவர்கள் மனஅழுத்தத்திலிருந்து பாதுகாக்கப்படுவார்கள்.
இந்த திட்டம், ‘குழந்தைகள் பாதுகாப்பு மற்றும் நீதிக்கான சட்டமூலத்தின்; ஒரு பகுதியாகும’;.
அதில் உடல் தண்டனையைத் தடை செய்யும் சட்டப்பிரிவுகளும் அடங்கியுள்ளன. இது அனைத்துலக குழந்தைகள் உரிமை தரநிலைகளுடன் ஏற்புடையதாக இருப்பதாக அமைச்சர் நானாயக்காரா குறிப்பிட்டுள்ளார்.
நீதி அமைச்சகம், இத்திட்டத்தை அடுத்தகட்டமாக நாடு முழுவதும் விரிவாக்கத் திட்டமிட்டுள்ளது.

