நாட்டில் மிகவும் அபாயகரமான சூழ்நிலைகளில் வாழ்ந்து வரும் சுமார் 17,000 சிறார்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர் என பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தகவல் தெரிவித்துள்ளார்
அவர் மேலும் கூறியதாவது, ஒரு சிறாரும் பின்தங்காமல், நாட்டின் அனைத்து நிலைகளிலும் குழந்தைகள் கண்காணிக்கப்பட்டு வருகிறார்கள். இதன்மூலம் ஒவ்வொரு குழந்தைக்கும் தேவையான சமூகப் பாதுகாப்பு அளிக்கப்படுவதாகவும் தெரிவித்தார்.
வடமேற்கு மாகாண சபை அரங்கில் இன்று (26) நடைபெற்ற, உயர்தரப் பரீட்சையில் (யுஃடு) சிறப்பாக தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு பாராட்டு விழாவில் கலந்துகொண்டபோதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.
தற்போதைய அரசாங்கம், ஜனாதிபதியின் தலைமையில், எதிர்கால தலைமுறைகள் வாழத் தகுந்த ஒரு நாடை உருவாக்க உறுதிபூண்டுள்ளதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார்.

