யாழ்ப்பாண நகரில் இன்று சமவுரிமை இயக்கத்தின் ஏற்பாட்டில் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து கவனஈர்ப்பு போராட்டம் ஒன்று நடைபெற்றது.
இந்த போராட்டத்தில், செம்மணி புதைகுழி விவகாரம், பயங்கரவாத தடைச் சட்டம் (PTA), பட்டலந்தை வதை முகாம், காணாமல் ஆக்கப்பட்டோர் பிரச்சினை, மற்றும் பிற புதைகுழி விவகாரங்கள் குறித்து உடனடியாக விசாரணை நடத்தி நீதியை வழங்க வேண்டும் என கோரப்பட்டிருந்தது.
போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கோஷங்களை எழுப்பி, “அனைத்து காணாமல் ஆக்கல்களுக்கும் இப்போதாவது நீதியை வழங்கு”, “செம்மணியில் மீண்டும் புதைக்க இடம்கொடுக்காமல் உண்மையை வெளிப்படுத்து”, “அடக்குமுறைகள் இனி வேண்டாம்”, “பயங்கரவாத தடைச் சட்டத்தை உடனே நீக்கு”, “அனைத்து இனங்களுக்கும் சம உரிமை வழங்கு” போன்ற வாசகங்கள் இடம்பெற்ற பதாகைகளை ஏந்தினர்.
இந்த போராட்டத்தில் பௌத்த மதகுருக்கள், சமவுரிமை இயக்கத்தினர், வசந்த முதலிகே உள்ளிட்டோர், சிங்களரும் தமிழரும் இணைந்து பங்கேற்றனர்.
அவர்கள் ஒற்றுமையுடன் நீதி கோரி முழங்கிய காட்சி யாழ்ப்பாண நகரின் மக்கள் மனங்களில் ஆழ்ந்த தாக்கத்தை ஏற்படுத்தியது.


