இலங்கை தேசிய புகைப்படக் கலைச் சங்கம் (NPAS) தனது 2026 ஆம் ஆண்டுக்கான ஆண்டு புகைப்படக் கலைப் பயிற்சி நெறிக்கான விண்ணப்பங்களை தற்போது ஏற்கத் தொடங்கியுள்ளது.
புதிய புகைப்படக் கலைஞர்கள் மற்றும் அனுபவமுள்ள நிபுணர்களுக்காக வடிவமைக்கப்பட்ட இந்தப் பாடநெறி, பங்கேற்பாளர்களின் தொழில்நுட்ப திறன்கள் மற்றும் கலை உணர்வை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
இது அந்தச் சங்கத்தின் முக்கியமான ஆண்டு நிகழ்ச்சிகளில் ஒன்றாகும்.
புகைப்படத் துறையில் சிறந்த நிபுணர்களிடமிருந்து நேரடி வழிகாட்டுதலுடன் இந்தப் பயிற்சி வழங்கப்படும் என NPAS தெரிவித்துள்ளது.
பங்கேற்க விரும்பும் நபர்கள் விரைவில் விண்ணப்பிக்குமாறு
கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர், ஏனெனில் இடங்கள் மட்டுப்படுத்தப்பட்டுள்ளது.
பாடநெறி அமைப்பு, தகுதித் தரங்கள் மற்றும் விண்ணப்ப முறைகள் தொடர்பான கூடுதல் தகவல்களை சங்கத்தின் உத்தியோகப்பூர்வ இணையதளமான https://npasrilanka.org/membership மூலம் பெற்றுக்கொள்ளலாம்.

