இந்தியா

முதலமைச்சர் ஸ்டாலின் மன்னிப்பு கேட்க வேண்டும்- அன்புமணி ராமதாஸ்.

அதானி தமிழகத்திற்கு வந்து முதல்வர் ஸ்டாலினை சந்தித்ததாக செய்திகள் வந்துள்ளன, இதுபற்றி முதலமைச்சர் விளக்க வேண்டும் என ராமதாஸ் குறிப்பிட்டிருந்தார்.இதுகுறித்து இன்று நடந்த செய்தியாளர் சந்திப்பில் ஸ்டாலினிடம் கேள்வி எழுப்பப்பட்டது.

அப்போது, ‘டாக்டர் ராமதாசுக்கு வேறு வேலை இல்லை. தினமும் ஏதாவது ஒரு அறிக்கை வெளியிடுவார்.அதற்கெல்லாம் பதில் சொல்ல வேண்டிய அவசியமில்லை’ என்று காட்டமாக பதில் அளித்தார்.

இந்நிலையில் இந்த பதிலுக்கு பாமக தலைவரும் பாராளுமன்ற எம்பியுமான அன்புமணி ராமதாஸ் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இன்று தொடங்கிய பாராளுமன்றகுளிர்கால கூட்டத்தொடரில் பங்கேற்க டெல்லி சென்ற அன்புமணி அங்கு வைத்து செய்தியாளர்களிடம் பேசியுள்ளார்.
அப்போது, ஆணவத்துடன் பேசுவது முதலமைச்சர் பதவிக்கு அழகல்ல.
இதை எங்களால் ஏற்றுக்கொள்ள முடியாது.

முதலமைச்சர் முதலில் ஐயாவுக்கு வருத்தம் தெரிவிக்க வேண்டும்,
உடனடியாக மன்னிப்பு கேட்க வேண்டும். இல்லையென்றால் எங்கள் தொண்டர்களின் உணர்வை கட்டுப்படுத்த முடியாது என்று எச்சரித்துள்ளார்.

 

https://graphicsland.lk/

https://tamilwin.com/

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

இந்தியா

144 பயணிகளுடன் 2.35 மணி நேரமாக வானில் வட்டமடித்த விமானம்… பத்திரமாக தரையிறக்கம்

திருச்சி சர்வதேச விமான நிலையத்தில் இருந்து புறப்பட்ட விமானம் தொழில் நுட்பகோளாறு காரணமாக, சுமார் 2 மணி நேரம் 35 நிமிடமாக வானத்திலேயே வட்டமடித்து கொண்டு இருந்த
இந்தியா

குடிமக்கள் கொண்டாட்டம் டாஸ்மாக் கடை திறப்பதற்கு முன்பே விற்பனை ஆரம்பம்

டாஸ்மாக் கடைகள் 12 மணிக்கு திறக்கப்படுவதே வழக்கமாக இருந்து வருகின்றது ஆனால், தீபாவளி தினமான இன்றைய தினம் விதி மீறப்பட்டு மது விற்பனை ஆகா… ஓகோ…. என