ஆசிரியர் கருத்துக்கள்

வீடு கட்டிக் கொடுத்தால் வேட்பாளராகலாம்

இலங்கை தமிழ் அரசு கட்சியின் தலைவர் மாவை சேனாதிராசாவின் வீடு மாவிட்டபுரத்தில் உள்ளது.

மாவையின் பூர்வீக வீடு யுத்தத்தில் முற்றாக சிதைந்தது.
யுத்தம் முடிந்த பின்னர் அந்த காணியில் புதிதாக வீடு கட்டப்பட்டது.

இலங்கை தமிழ் அரசு கட்சியின் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரனின் பூர்வீக வீடு, குடத்தனையில் உள்ளது.

யுத்தம் முடிந்த பின்னர் அந்த வீடு புனரமைக்கப்பட்டது.

பால் காய்ச்சும் நிகழ்வில் அப்போதைய வடக்கு மாகாண முதல்வர் க.வி.விக்னேஸ்வரனும் கலந்து கொண்டிருந்தார்.

மாவையின் வீட்டை கட்டியதும், சுமந்திரனின் வீட்டை புனரமைத்ததும் ஒரே கட்டுமான நிறுவனம் ஆகும்.

அந்த நிறுவனத்தின் உரிமையாளர் கிருஸ்ணவேணி.

2024 பொதுத்தேர்தலில் இலங்கை தமிழ் அரசு கட்சியின் யாழ் மாவட்ட வேட்பாளராக களம் இறங்கியுள்ளாhர்

வீட்டில் ஆசனம் வேண்டும் என்றால் முதலில் வீட்டை கட்ட வேண்டும்.

வீடு கட்டுவதென்றால் வீட்டு சின்னமான தமிழர்களையும் அவர்களின் வாழ்வியலையும் மெருகேற்றுவதோ அல்லது விருத்தி செய்வதோ அல்ல.

மாறாக வீட்டு சின்னத்தை கையகப்படுத்தியிருக்கும் தலைவர்களுக்கு வீடு கட்டுவது. கக்குஸ் கட்டுவது மதில் கட்டுவது இப்படி செய்ய வேண்டும்.

மாகாணசபையில் ஆசனம் தரப்படும். மேசன் கரண்டி அத தான் பாருங்கோ சாந்தாப்பபை எடுத்துக்கொண்டு வாங்கோ

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

ஆசிரியர் கருத்துக்கள் முக்கிய செய்திகள்

மாற்றத்தின் மஞ்சள் ஒளியோ? மறுசுழற்சி வேலியோ?

இலங்கை இன்று ஒரு முடிவில்லா மாற்றப் பாதையில் பயணிக்கிறது. கடந்த வாரத்தில் மட்டும் பல முன்னணி விடயங்கள் நம் நாடு எவ்வாறான குழப்ப நிலைக்குள் சிக்கிக்கொண்டிருக்கிறது என்பதை
ஆசிரியர் கருத்துக்கள் முக்கிய செய்திகள்

இன்றைய (14-07-2025 ஆசிரிய தலையங்கம்

தடைகள் நிறைந்த எதிர்கால பாதை – அமெரிக்க வரிகள், கடன் சுமைகள், பொருளாதார நெருக்கடி இலங்கை அழகான இயற்கைக் காட்சிகள், பன்முகமான பருவவியல்கள், வரலாற்று மரபுகள், கலாச்சாரம்