யாழ் மாவட்டத்தில் உணவு உற்பத்தி மற்றும் விற்பனை நிலையங்களின் சுகாதார நிலையை மேம்படுத்தும் நோக்குடன் வடமாகாண சுகாதாரப் பணிப்பாளரின் வழிகாட்டலின் கீழ் இன்று திடீர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதுள்ளது.
அதன்படி இன்று யாழ்ப்பாணம் நல்லூர்இ உடுவில் ஆகிய சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுகளில் இந்த செயற்பாடு முன்னெடுக்கப்பட்டது.
இந்த பரிசோதனையில் சுகாதாரத்திணைக்களத்தை சேர்ந்த 9 குழுக்கள் களத்தில் இறங்கின
இதனால் 76 உணவு கையாளும் நிலையங்கள் மேற்பார்வை செய்யப்பட்டதில் 28 உணவு கையாளும் நிலையங்களில் குறைபாடுகள் காணப்பட்டிருந்தன.
12 உணவு கையாளும் நிலையங்களுக்கு குறைபாடுகளை சீர்செய்யும்படி எழுத்துமூல அறிவுறுத்தல்களும் வழங்கப்பட்டிருந்தது
15 உணவு கையாளும் நிலையங்களில் தரமற்ற உணவுகள் பறிமுதல் செய்யப்பட்டதுடன் 2 உணவு கையாளும் நிலையங்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை முன்னெடுக்கப்படிருந்தது

