உள்ளூர்

வெள்ளத்தினால் சேதமடைந்த சுமார் 80,000 ஏக்கர் விளைநிலங்கள்!

மோசமான வானிலை காரணமாக கடந்த நவம்பர் மாதம் ஏற்பட்ட வெள்ளத்தினால் சேதமடைந்த சுமார் 80,000 ஏக்கர் விளைநிலங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன.

2024/25 பெரும்போக நடவடிக்கையில் கடந்த நவம்பரில் ஏற்பட்ட வெள்ளத்தால் சேதமடைந்த பயிர்களை ஆய்வு செய்யும் பணி தற்போது வேளாண் வளர்ச்சித் துறையின் உதவியுடன் மற்றும் விவசாயிகள் அமைப்புகளின் பங்களிப்புடன் செய்யப்படுகிறது.

இவற்றில் பொலன்னறுவை, வவுனியா, முல்லைத்தீவு மற்றும் மன்னார் ஆகிய மாவட்டங்களில் சேத ஆய்வு தற்போது நிறைவடைந்துள்ளது.

இதுதவிர மட்டக்களப்பு, அம்பாறை, திருகோணமலை மாவட்டங்களில் 29 ஆம் திகதிக்குள் பயிர்ச் சேதங்கள் தொடர்பான ஆய்வுப் பணிகளையும்,

அனுராதபுரம், குருநாகல், மாத்தளை மாவட்டங்களில் பயிர்ச் சேதங்கள் தொடர்பான ஆய்வுப் பணிகளை டிசம்பர் 30 ஆம் திகதிக்குள் முடிக்கவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

பயிர் இழப்புக்கள் மதிப்பீடு செய்யப்பட்டு மதிப்பீடு தொடர்பான அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டவுடன், அனர்த்தங்களினால் பாதிக்கப்பட்ட விவசாயிகளின் கணக்குகளில் இழப்பீட்டுத் தொகை வரவு வைக்கப்படும் என விவசாய மற்றும் கமநல காப்புறுதிச் சபை மேலும் தெரிவித்துள்ளது.

இதையும் படியுங்கள்>செட்டிக்குளம் பிரதேச செயலக அபிவிருத்திக் குழுக் கூட்டம்!

https://www.youtube.com/shorts/atLxMM-2DHY?feature=share

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

உள்ளூர்

ராஜபக்ஷக்களுக்கு எதிரான ஊழல்களின் விசாரணைகள் ஆரம்பிக்கப்ட்டுள்ளது

கடந்த காலத்தில் சர்ச்சைகளை ஏற்படுத்திய ராஜபக்ஷக்களுக்கு எதிரான அனைத்து ஊழல் மற்றும் மோசடி வழக்குகள் தொடர்பான விசாரணைகள் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தேசிய மக்கள் சக்தியின் தேசிய செயற்குழு
உள்ளூர்

முல்லைத்தீவில் வர்த்தக நிலையமொன்று தீக்கிரையானது

முல்லைத்தீவு சிலாவத்தை பகுதியில் கடை ஒன்று எரிந்த சம்பவம் செவ்வாய்க்கிழமை (08) அதிகாலை இடம்பெற்றுள்ளது. முல்லைத்தீவு சிலாவத்தை சந்தைக்கு முன்பாக அமைந்துள்ள பலசரக்கு கடை ஒன்றும் அதனுடன்