உள்ளூர்

சர்வதேச “FACETS Sri Lanka – 2025′ இரத்தினக்கல் மற்றும் ஆபரண கண்காட்சி

சர்வதேச “FACETS Sri Lanka  – 2025′ இரத்தினக்கல் மற்றும் ஆபரண கண்காட்சி ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தலைமையில் இன்று (04) சினமன் கிராண்ட் ஹோட்டலில் ஆரம்பமானது.

இதன்போது ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கஇ காட்சிக்கு வைக்கப்பட்டிருந்த இரத்தினக்கல் மற்றும் ஆபரணக் கூடங்களை பார்வையிட்டார்.

இலங்கை இரத்தினக்கல் மற்றும் ஆபரணச் சங்கம் , தேசிய இரத்தினக்கல் மற்றும் ஆபரண அதிகாரசபை மற்றும் ஏற்றுமதி ஊக்குவிப்புச் சபை, என்பன இணைந்து ஏற்பாடு செய்திருக்கும்

“FACETS Sri Lanka  சர்வதேச இரத்தினக்கல் மற்றும் ஆபரண கண்காட்சி  04 முதல் 06 திகதி வரை நடைபெறவுள்ளது.

ஆசியாவின் முதன்மை இரத்தினக்கல் மற்றும் ஆபரண கண்காட்சியான “FACETS Sri Lanka  இம்முறை 31 ஆவது தடவையாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதுடன் சீனா, இந்தியா, ஐக்கிய அமெரிக்கா, ஐரோப்பா மற்றும் பல நாடுகளின் பிரதிநிதிகளும் இந்த கண்காட்சியில் கலந்துகொண்டுள்ளனர்.

இலங்கைக்கு முதல் முறையாக வரும் உலகின் புகழ்பெற்ற இரத்தினக்கல் மற்றும் ஆபரண நிறுவனங்களின் பிரதிநிதிகள் பலரும் இம்முறை நிகழ்வில் கலந்துகொண்டுள்ளதோடு, இரத்தினபுரி, எலஹெரஇ பேருவல, எஹெலியகொட, காலி மற்றும் கொழும்பு உள்ளிட்ட பகுதிகளிலிருந்து உள்நாட்டு இரத்தினக்கல் கொள்வனவாளர்கள் பலரும் “FACETS Sri Lanka 2025″ கண்காட்சியில் பங்குபற்றியுள்ளர்.

உலகெங்கிலும் உள்ள வர்த்தகர்கள்இ ஏற்றுமதியாளர்கள் மற்றும் பல தரப்புடனான வர்த்தக வாய்ப்புக்களை உருவாக்குவதே இந்த தொழில்துறை முன்னோடிகளின் பிரதான நோக்கமாகும். ‘”FACETS Sri Lanka 2025”  கண்காட்சியின் அடிப்படையில் ஏற்றுமதி மூலம் 1 பில்லியன் அமெரிக்க டொலர்களை விடவும் அதிகமாக ஈட்டிகொள்ள எதிர்பார்க்கப்படுகிறது.

உள்நாட்டு மற்றும் உலகளாவிய இரத்தினக்கல் மற்றும் ஆபரணத் தொழில்துறையினர் ஆவலுடன் பங்கேற்கும் “FACETS Sri Lanka 2025”   கண்காட்சி, இலங்கையின் உயர் இரத்தினக்கல் மற்றும் ஆபரண பாரம்பரியம், பல்வகைத்தன்மை மற்றும் நிலைத்தன்மைக்கு சான்றாகும்.

இதையும் படியுங்கள்>யாழில் வன்முறைக் கும்பலின் அட்டகாசம்:அதிர்ச்சி காணொளி!

https://www.youtube.com/@pathivunews/videos

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

உள்ளூர்

ராஜபக்ஷக்களுக்கு எதிரான ஊழல்களின் விசாரணைகள் ஆரம்பிக்கப்ட்டுள்ளது

கடந்த காலத்தில் சர்ச்சைகளை ஏற்படுத்திய ராஜபக்ஷக்களுக்கு எதிரான அனைத்து ஊழல் மற்றும் மோசடி வழக்குகள் தொடர்பான விசாரணைகள் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தேசிய மக்கள் சக்தியின் தேசிய செயற்குழு
உள்ளூர்

முல்லைத்தீவில் வர்த்தக நிலையமொன்று தீக்கிரையானது

முல்லைத்தீவு சிலாவத்தை பகுதியில் கடை ஒன்று எரிந்த சம்பவம் செவ்வாய்க்கிழமை (08) அதிகாலை இடம்பெற்றுள்ளது. முல்லைத்தீவு சிலாவத்தை சந்தைக்கு முன்பாக அமைந்துள்ள பலசரக்கு கடை ஒன்றும் அதனுடன்