முக்கிய செய்திகள்

யாழ்ப்பாண முதலாளிகள் அவர்களின் ஊழியர்களை ஏமாற்றிவருகின்றார்கள் என முறைப்பாடு

யாழ்ப்பாணத்தில் தனியார் நிறுவனங்கள் பல அதன் ஊழியர்களுக்கு ஊழியர் சேமலாப நிதியம், மற்றும் ஊழியர் நம்பிக்கை நிதியம் போன்றவற்றுக்கு பணம் கட்டுவது கூறியுள்ள போதும் அதற்கான பணம், சம்பளத்திலிருந்து பெறப்பட்டாலும், கட்டியதற்கான பற்றுச்சிட்டுகளோ, அல்லது வைப்பிலிட்டமைக்கான ஆதாரங்கள் வழங்காது ஊழியர்களை ஏமாற்றி அவர்களிடம் வேலை வாங்கி வருவதாக ஊழியர்கள் பலர் ஊழியர் சேமலாப நிதியம் உதவி பணிப்பாளரிடம் முறைப்பாடு வழங்கியுள்ளார்கள்.

குறித்த விடயங்கள் தொடர்பில் ஊழியர்கள் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில்,

‘யாழ்ப்பாணத்தில் நாம் ஒரு நிறுவனத்தில் பல வருடங்களாக வேலை செய்து வந்தோம். எமக்கு வேலை தரும் போது ஊழியர் சேமலாப நிதியம் மற்றும் ஊழியர் நம்பிக்கை நிதியம் போன்றவற்றுக்கு பணம் கட்டுவதாக கூறினார்கள். அதுமட்டுமன்றி மாதாந்த சம்பளம் வைப்பிலிட்டதாக கூறினார்கள்.

ஆனால் சம்பளம் மட்டும் வங்கியில் வைப்பிலிட்டார்கள் ஊழியர் சேமலாப நிதியம் மற்றும் ஊழியர் நம்பிக்கை நிதியம் போன்றவற்றுக்கு பணம் கட்டவில்லை. அதற்கான விண்ணப்பம் நிரப்பப்படவில்லை. ஆனால் எமது சம்பள பணத்தில் அதற்கான பணத்தை கழித்து வருகிறார்கள்.எமக்கு சம்பள பட்டியல் தருவதில்லை. வங்கியில் பார்ப்பதன் மூலம் எமக்கான சம்பளம் கிடைத்துள்ளது தெரியவரும்.

நாம் எதைக் கேட்டாலும் எமக்கு காரணம் கூறி சமாளித்து விடுவார்கள். எனக்கு மட்டுமன்றி எம்மோடு வேலை செய்த பலருக்கும் இதே நிலைதான். சிலர் ஐந்து வருடமாக வேலை செய்த போதும் அவர்களில் சிலருக்கு ஒரு சில மாதங்கள் ஊழியர் சேமலாப நிதியம் மற்றும் ஊழியர் நம்பிக்கை நிதியம் போன்றவற்றுக்கு பணம் கட்டியுள்ளார்கள். அதற்கு பலருக்கு விவரங்கள் வழங்கப்படவில்லை. சிலருக்கு வழங்கப்பட்டுள்ளது.

எனினும் முறைப்படியாக எவருக்கும் சில நிறுவனங்கள் வர்த்தக நிலையங்கள் ஊழியர் சேமலாப நிதியம் மற்றும் ஊழியர் நம்பிக்கை நிதியம் போன்றவற்றுக்கு பணம் கட்டுவதில்லை. நிறுவனத்தில் ஒருவர் வேலை செய்தால் இரண்டு வாரத்தில் ஊழியர் சேமலாப நிதியத்திற்கு அறிவிக்க வேண்டும் என்பது நடைமுறையில் உள்ள விதிமுறையாகும். இதை யார் நடைமுறைப்படுத்துகிறார்கள், யார் கண்காணிப்பது என்பதே தற்போதைய கேள்வியாக உள்ளது .

கடந்த காலத்தில் யாழ்ப்பாணத்தில் குறித்த தொழில் திணைக்கள அதிகாரிகள் சில வர்த்தக நிலையங்கள், நிறுவனங்களுக்கு திடீர் விஜயம் மேற்கொண்டு ஊழியர்கள் நலன்கள் சம்பள விவரங்கள், ஊழியர் விவரங்கள் போன்றவற்றை கண்காணித்து நடவடிக்கைகள் எடுக்கும் நடைமுறை இருந்து வந்துள்ளது. தற்போது அவை நடைமுறையில் இருக்கிறதா என்பது கேள்விக்குறியாக உள்ளது.

இதேவேளை பாதுகாப்பு சேவையில் ஈடுபடும் நிறுவனங்களிலும் இத்தகைய ஊழியர் சேமலாப நிதியம் மற்றும் ஊழியர் நம்பிக்கை நிதியம் போன்றவற்றுக்கு பணம் கட்டுவதாக கூறுகின்றபோதும் முறையான விபரங்கள் பாதுகாப்பு ஊழியர்களுக்கு வழங்கப்படுவதில்லை என்ற குற்றச்சாட்டு இருக்கின்றது. அவர்களது வேலை நேரத்திலும் பல பிரச்சினைகள் காணப்படுகிறது.

குறிப்பாக நிறுவனங்களுக்கு பாதுகாப்பு சேவைக்கு ஆட்களை நியமிக்கும் போது அதிகளவான பணத்தை பாதுகாப்பு சேவை நிறுவனங்கள் பெற்றுக்கொள்கிறார்கள். ஆனால் வேலை செய்யும் ஊழியருக்கு முழுமையான நிதியை வழங்குவதில்லை. இத்தகைய நிறுவனங்களையும் கண்காணித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.

அரச ஊழியர்களுக்கு பல்வேறுவிதமாக அரச சலுகைகள் கிடைக்கின்ற போதும் அரச சார்பற்ற தனியார், தனிநபர்களுக்கான சலுகைகள் தொடர்பில் அரசாங்கம் முறையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.

ஓய்வுகால நிதியாக ஊழியர்களுக் இத்தகைய நிதி கிடைப்பதை உறுதி செய்வதற்கு ஆட்சியில் உள்ளவர்கள் ,வடக்கு மாகாண ஆளுநர் உரிய நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என்பதே கோரிக்கையாக உள்ளது என மேலும் தெரிவித்தனர்.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

உள்ளூர் முக்கிய செய்திகள்

சீனாவில் பரவி வரும் HMPV வைரஸ் தொடர்பில் அச்சமடைய தேவையில்லை

இத்தினங்களில் சீனாவில் பரவி வரும்  HMPV வைரஸ், கடந்த காலங்களில் இலங்கையிலும் அடையாளம் காணப்பட்ட வைரஸ் நோய் நிலைமையாகும் என வைத்திய ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்த
உள்ளூர் முக்கிய செய்திகள்

அநுர அரசுக்கு சவால் விடுத்த முன்னாள் அமைச்சர் பந்துல குணவர்த்தன!

அரசாங்கம் நாட்டை ‘சுத்தம்’ செய்யப் போகிறது என்றால் முதலில் இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையிலான ஒப்பந்தங்களில் உள்ள மோசடிகளை சுத்தம் செய்ய வேண்டும் என முன்னாள் அமைச்சர் பந்துல