மன்னாரில் இருவர் பலியான துப்பாக்கிச்சூட்டு சம்பவம்; பிரதான சந்தேக நபருக்கு சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக பதில் பொலிஸ் மா அதிபர் சட்டத்தரணி பிரியந்த வீரசூரிய தெரிவித்துள்ளார்
மன்னார் நீதிமன்றத்தின் முன் கடந்த வியாழக்கிழமை(16) இடம்பெற்ற துப்பாக்கி சூட்டு சம்பவத்தின் போது இருவர் உயிரிழந்துள்ள சம்பவத்தை வழி நடத்தியவர் வெளிநாட்டில் வசித்து வருகின்றார் என பொலிஸார் நடத்pய விசாரணையின் போது தெரியவந்துள்ளது
மாட்டுவண்டி சவாரியின் போது ஏற்பட்ட வாய்த்தர்க்கத்தினால் நடைபெற்ற மோதலைத் தொடர்ந்து பலி வாங்கும் நோக்கில் இந்தக்கொலை இடம் பெற்றுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.