வார இறுதியில் கனடாவின் ரொறன்ரோவில் கடுமையான குளிருடனான காலநிலை நிலவும் என எதிர்வு கூறப்பட்டுள்ளது.
கனடாவிலும் அமெரிக்காவிலும் சில பகுதிகளில் ஆர்க்டிக் காற்று வீசுவதால் கடுமையான குளிர் நிலவும் என கனடிய சுற்றாடல் திணைக்களம் அறிவித்துள்ளது
சனிக்கிழமை பிற்பகலில், பகல்நேர வெப்பநிலை அதிகபட்சம் -4 C ஆகக் குறையும், இது மறை 10 பாகை செல்சியஸ் அளவில் உணரப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஈரப்பதனின் அளவு அதகிரிப்பதனால் ஞாயிறன்று மறை 20 பாகை செல்சியஸ் வெப்பநிலையை உணர முடியும் என தெரிவிக்கப்படுகின்றது.
ஆர்க்டிக் காற்றின் ஆதிக்கம் அடுத்த வியாழக்கிழமை வரை நீக்கும் என எதிர்வுகூறப்பட்டுள்ளது.

