முக்கிய செய்திகள்

அநுர அரசுக்கு ஐநா கொடுத்துள்ள காலம் செப்டெம்பருடன் முடிவுக்கு வருகின்றது- அம்பிகா சற்குணநாதன்

ஐ.நா. மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் அலுவலகத்தினால் முன்னெடுக்கப்பட்டுவரும் இலங்கையின் கடந்தகால மீறல்கள் தொடர்பான ஆதாரங்களைத் திரட்டும் பொறிமுறையானது ஏதேனுமொரு மட்டத்தில் தொடரவேண்டியது அவசியம் என அவர் வலியுறுத்தியுள்ளார்

ஏனெனில் இலங்கையில் மீறல்கள் எவையும் இடம்பெறவில்லை என அரசாங்கங்கள் தொடர்ச்சியாகக் கூறிவருவதை நிராகரிக்கும் பொறிமுறையாக இதுவே இருக்கிறது எனச் சட்டத்தரணி அம்பிகா சற்குணநாதன் சுட்டிக்காட்டியுள்ளார்.

இலங்கை தொடர்பில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் காலநீடிப்பு செய்யப்பட்ட 57ஃ1 தீர்மானம் எதிர்வரும் செப்டெம்பர் மாதத்துடன் முடிவுக்குவருகின்றது.

இந்நிலையில், இலங்கையில் இடம்பெற்ற கடந்தகால மீறல்கள் தொடர்பான ஆதாரங்களைத் திரட்டும் பொறிமுறை தொடரவேண்டியது அவசியம் என சித்திரவதைகளுக்கு எதிரான ஐக்கிய நாடுகள் நம்பிக்கை நிதியத்தின் உறுப்பினரும், இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் முன்னாள் ஆணையாளருமான சட்டத்தரணி அம்பிகா சற்குணநாதன் வலியுறுத்தியுள்ளார்.

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 58 ஆவது கூட்டத்தொடர் எதிர்வரும் பெப்ரவரி 24 ஆம் திகதி ஆரம்பமாகி, ஏப்ரல் 4 ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது.

கடந்த செப்டெம்பர் மாதம் ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் 57 ஆவது கூட்டத்தொடர் நடைபெற்ற வேளையிலேயே இலங்கையில் ஜனாதிபதித்தேர்தலில் தேசிய மக்கள் சக்தியின் சார்பில் போட்டியிட்ட அநுரகுமார திசாநாயக்க ஜனாதிபதியாகத் தெரிவுசெய்யப்பட்டார்.

அதனையடுத்து இலங்கை தொடர்பில் ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் ஏற்கனவே நிறைவேற்றப்பட்ட இலங்கையில் நல்லிணக்கம், பொறுப்புக்கூறல் மற்றும் மனித உரிமைகளை மேம்படுத்தல் எனும் தலைப்பிலான தீர்மானம் வாக்கெடுப்பின்றி மேலும் ஒருவருடகாலத்துக்குக் காலநீடிப்பு செய்யப்பட்டது.

ஓராண்டுக்கு காலநீடிப்பு செய்யப்பட்ட தீர்மானம் எதிர்வரும் செப்டெம்பர் மாதம் நடைபெறவுள்ள ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் 60 ஆவது கூட்டத்தொடருடன் முடிவுக்கு வருகிறது.
உலகளாவிய ரீதியில் பல்வேறு பிரச்சினைகள் முக்கிய கவனம் பெற்றிருப்பதனால், எதிர்வரும் செப்டெம்பர் மாதக்கூட்டத் தொடரின்போது இலங்கை தொடர்பான தீர்மானம் புதுப்பிக்கப்படுமா? அல்லது புதியதொரு பிரேரணை கொண்டுவரப்படுமா? என்பது பற்றி உத்தரவாதமாகக் கூறமுடியாது எனத் தெரிவித்தார்.
இருப்பினும் ஐ.நா மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் அலுவலகத்தினால் முன்னெடுக்கப்பட்டுவரும் இலங்கையின் கடந்தகால மீறல்கள் தொடர்பான ஆதாரங்களைத் திரட்டும் பொறிமுறையானது ஏதேனுமொரு மட்டத்தில் தொடரவேண்டியது அவசியம் என அவர் வலியுறுத்தியுள்ளார்.

ஏனெனில் இலங்கையில் மீறல்கள் எவையும் இடம்பெறவில்லை என அரசாங்கங்கள் தொடர்ச்சியாகக் கூறிவருவதை நிராகரிக்கும்பொறிமுறையாக இதுவே இருக்கிறது எனச் சுட்டிக்காட்டினார்.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

உள்ளூர் முக்கிய செய்திகள்

சீனாவில் பரவி வரும் HMPV வைரஸ் தொடர்பில் அச்சமடைய தேவையில்லை

இத்தினங்களில் சீனாவில் பரவி வரும்  HMPV வைரஸ், கடந்த காலங்களில் இலங்கையிலும் அடையாளம் காணப்பட்ட வைரஸ் நோய் நிலைமையாகும் என வைத்திய ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்த
உள்ளூர் முக்கிய செய்திகள்

அநுர அரசுக்கு சவால் விடுத்த முன்னாள் அமைச்சர் பந்துல குணவர்த்தன!

அரசாங்கம் நாட்டை ‘சுத்தம்’ செய்யப் போகிறது என்றால் முதலில் இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையிலான ஒப்பந்தங்களில் உள்ள மோசடிகளை சுத்தம் செய்ய வேண்டும் என முன்னாள் அமைச்சர் பந்துல