முக்கிய செய்திகள்

நீதியை நிலைநாட்டுவதே அரசின் நோக்கம் என பிரதமர் தெரிவித்துள்ளார்

சலுகைகள் மற்றும் ஆதரவின் அடிப்படையில் நீதி கிடைக்காமல் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதியைப் பெற்றுக்கொடுப்பது அரசாங்கத்தின் நோக்கமாகும் என பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்தார்.

சீன மக்கள் குடியரசின் முழுமையான நிதி உதவியின் கீழ் புனரமைக்கப்பட்ட மேன்முறையீட்டு நீதிமன்ற கட்டடத்தை நேற்று (18) பொது மக்களிடம் கையளிக்கும் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே பிரதமர் இவ்வாறு தெரிவித்தார்.

அங்கு மேலும் கருத்து தெரிவித்த பிரதமர்,

ஒரு நாட்டின் நீதி முறைமையில், நாட்டு மக்களுக்கு நீதி வழங்குவதற்கான வசதிகளுக்காக செய்யப்படும் முதலீடு நாட்டுக்கும் அதன் மக்களுக்குமான அர்ப்பணிப்பின் பிரதிபலிப்பாகும்.

இது வெறுமனே ஒரு கட்டடம் மட்டுமல்ல. இது நீதி, சமத்துவம் மற்றும் கண்ணியத்தின் சின்னமாகும்.

சலுகைகள் மற்றும் ஆதரவு முறைமைகளின் கீழ் பலருக்கு நீதி மறுக்கப்படுவதால் நமது நாடு பல தசாப்தங்களாக பாதிக்கப்பட்டுள்ளது.

அந்த தவறுகளை சரிசெய்து, கடந்த கால அநீதிகளை சரிசெய்வதும், அனைவருக்கும் நீதி கிடைப்பதை உறுதி செய்வதுமே அரசின் நோக்கம் என பிரதமர் மேலும் தெரிவித்துள்ளார்

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

உள்ளூர் முக்கிய செய்திகள்

சீனாவில் பரவி வரும் HMPV வைரஸ் தொடர்பில் அச்சமடைய தேவையில்லை

இத்தினங்களில் சீனாவில் பரவி வரும்  HMPV வைரஸ், கடந்த காலங்களில் இலங்கையிலும் அடையாளம் காணப்பட்ட வைரஸ் நோய் நிலைமையாகும் என வைத்திய ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்த
உள்ளூர் முக்கிய செய்திகள்

அநுர அரசுக்கு சவால் விடுத்த முன்னாள் அமைச்சர் பந்துல குணவர்த்தன!

அரசாங்கம் நாட்டை ‘சுத்தம்’ செய்யப் போகிறது என்றால் முதலில் இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையிலான ஒப்பந்தங்களில் உள்ள மோசடிகளை சுத்தம் செய்ய வேண்டும் என முன்னாள் அமைச்சர் பந்துல