பிரபாகரனுடன் சீமான் இருக்கும் போட்டோவை எடிட் செய்ததே நான்தான் என இயக்குநர் சங்ககிரி ராஜ்குமார் தெரிவித்துள்ளமை பரபரப்பை ஏறபடுத்தியுள்ளது
அந்த புகைப்படத்தை கவனித்தீர்கள் என்றால் சீமானுக்கு நிழல் வைத்திருப்பேன் என தெரிவித்த அவர் என்னால் முடிந்த அளவுக்கு அப்புகைப்படத்தை சிறப்பாக எடிட் செய்து கொடுத்ததாக மேலும் தெரிவித்துள்ளார்
பெரிதும் பாராட்டப்பட்ட ‘வெங்காயம்’ திரைப்படத்தின் மூலம் கவனத்தை ஈர்த்த இயக்குநர் சங்ககிரி ராஜ்குமார் அடுத்ததாக ‘பயாஸ்கோப்’ என்ற படத்தை இயக்கியுள்ளார்.
இப்படம் விரைவில் திரைக்கு வரவுள்ளது.
இந்நிலையில், விடுதலை புலிகளின் தலைவர் பிரபாகரன் உடன் சீமான் இருப்பது போன்ற புகைப்படத்தை எடிட் செய்ததே நான் தான் என்று இயக்குநர் சங்ககிரி ராஜ்குமார் கூறியுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் பக்கத்தில், ‘இவர், (சீமான் பெயரைக் குறிப்பிடாமல்) அவரை சந்திக்கவே இல்லை.
எதன் அடிப்படையில் சொல்கிறேன் என்றால்.. அந்த புகைப்படத்தை எடிட் செய்து கொடுத்தவன் என்கிற அடிப்படையில்’ என்று பதிவிட்டுள்ளார் .


