இந்தியா

மனைவியை கொலை செய்து அவயங்களை வெட்டி குக்கரில் வேக வைத்த கணவன் கைது

ஐதராபாத்தில் மனைவியை கொன்று அவரது உடலை துண்டு துண்டாக வெட்டி குக்கரில் வேக வைத்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
35 வயதுடைய தனது மகள் ஒருவாரமாக காணவில்லை என்று பெற்றோர் போலீசில் முறைப்பாடு செய்தனர்

அந்த முறைப்பாட்டின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்து விசாரணை தொடங்கிய போலீசாருக்கு பெண்ணின் கணவர் மீது சந்தேகம் ஏற்பட்டது.

இதையடுத்து அவரை விசாரணை வளையத்துக்குள் கொண்டு வந்து நடத்தப்பட்ட முதற்கட்ட விசாரணையில் அதிர்ச்சி தகவல் வெளியானது.

சம்பவத்தன்று கணவனுக்கும் மனைவிக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

இதனால் ஆத்திரமடைந்த கணவன் மனைவியை கொன்று அவரது உடல் பாகங்களை குக்கரில் வேக வைத்து அதன்பின் குளத்தில் வீசியதாக கூறியுள்ளார்.

இதையடுத்து போலீசார் அந்த நபர் கூறியதன் உண்மை தன்மை குறித்து விசாரித்து வருகின்றனர்.

கைதான நபர் ராணுவ வீரராக இருந்தவர் என்றும் தற்போது காவலராக பணியாற்றி வருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

 

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

இந்தியா

144 பயணிகளுடன் 2.35 மணி நேரமாக வானில் வட்டமடித்த விமானம்… பத்திரமாக தரையிறக்கம்

திருச்சி சர்வதேச விமான நிலையத்தில் இருந்து புறப்பட்ட விமானம் தொழில் நுட்பகோளாறு காரணமாக, சுமார் 2 மணி நேரம் 35 நிமிடமாக வானத்திலேயே வட்டமடித்து கொண்டு இருந்த
இந்தியா

குடிமக்கள் கொண்டாட்டம் டாஸ்மாக் கடை திறப்பதற்கு முன்பே விற்பனை ஆரம்பம்

டாஸ்மாக் கடைகள் 12 மணிக்கு திறக்கப்படுவதே வழக்கமாக இருந்து வருகின்றது ஆனால், தீபாவளி தினமான இன்றைய தினம் விதி மீறப்பட்டு மது விற்பனை ஆகா… ஓகோ…. என