ஐக்கிய தேசிய கட்சிக்கும் ஐக்கிய மக்கள் சக்திக்குமிடையிலான பேச்சுவார்த்தையொன்று அண்மையில் நடைப்பபெற்றுள்ளது.
இரு கட்சிகளினதும் பொதுச் செயலாளர்களுக்கிடையிலான இந்த பேச்சுவார்த்தை வெற்றிகரமாக நிறைவடைந்ததாக ஐக்கிய மக்கள் சக்தி தெரிவித்துள்ளது.
ஐக்கிய தேசிய கட்சியுடன் கூட்டணியமைப்பதற்கு ஐக்கிய மக்கள் சக்தியின் செயற்குழு அண்மையில் அங்கீகாரம் வழங்கியிருந்த நிலையில் கடந்த 18ஆம் திகதி அது குறித்த பேச்சுவார்த்தைகளும் ஆரம்பிக்கப்பட்டிருந்தன.
அத்தோடு கடந்த 20ஆம் திகதி ஐக்கிய தேசிய கட்சியின் செயற்குழுவிலும் இந்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டிருந்தது
இந்நிலையிலேயே இரண்டாம் கட்ட பேச்சுவார்த்தை நேற்றையதினம் கொழும்பிலுள்ள எதிர்க்கட்சி தலைவர் அலுவலகத்தில் இடம்பெற்றது.
அதனைத் தொடர்ந்து அன்றைய தினம் மாலை கொழும்பிலுள்ள நட்சத்திர ஹோட்டலொன்றில் இரு கட்சிகளினதும் பொதுச் செயலாளர்களது தலைமையில் சந்திப்பொன்று இடம்பெற்றது.
இருதரப்பினருக்குமிடையில் வெற்றிகரமான பேச்சுவார்த்தைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக இரு கட்சிகளினதும் தகவல்கள் தெரிவிக்கின்றன.