மன்னார் பூநகரி காற்றாலை மின்திட்டத்தை முன்னெடுப்பதற்கு இந்தியாவின் அதானி குழுமத்திற்கு கடந்த வருடம் ஜுன் மாதம் ரணில்விக்கிரமசிங்க அரசாங்கம் வழங்கிய அனுமதியை அமைச்சரவை இரத்து செய்துள்ளது.
ஜனாதிபதி தலைமையில் கூடிய அமைச்சரவை இந்த திட்டத்திற்கான அனுமதியை இரத்துசெய்வதற்கு தீர்மானித்துள்ளது.
இந்த திட்டத்திற்கு இலங்கையில் எதிர்ப்புகள் உருவானதுடன் நீதிமன்றத்தில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.