இந்தியா

தமிழக வெற்றிக் கழகத்தின் புதிய நிர்வாகிகளுக்கு விஜய் வாழ்த்து தெரிவித்துள்ளார்

சென்னை பனையூரில் உள்ள தமிழக வெற்றிக் கழக தலைமை அலுவலகத்தில் கட்சி நிர்வாகிகளுடன் விஜய் நேற்று ஆலோசனை நடத்தினார்.

இதில் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் மற்றும் தமிழகம் முழுவதும் இருந்து 100-க்கும் மேற்பட்ட நிர்வாகிகள் பங்கேற்றனர்.

அடுத்த மாதம் 2-ம் தேதி தமிழக வெற்றிக் கழகம் தொடங்கி முதலாம் ஆண்டு நிறைவு பெறுகிறது.

இந்த விழாவை பிரமாண்டமாக நடத்துவது பற்றி கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது.
அத்துடன் மாவட்ட கழகச் செயலாளர், மாவட்ட கழக இணைச் செயலாளர், பொருளாளர், 2 துணைச் செயலாளர்கள், 10 செயற்குழு உறுப்பினர் என தமிழகம் முழுவதும் நிர்வாக ரீதியாக 120 மாவட்டச் செயலாளர்களை நியமனம் செய்து தவெக தலைவர் விஜய் உத்தரவிட்டார்.

இந்நிலையில், புதிதாகப் பொறுப்பேற்றுள்ள நிர்வாகிகளுக்கு அக்கட்சியின் தலைவர் விஜய் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக விஜய் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில்,

புதியதாகப் பொறுப்பேற்கும் நிர்வாகிகளுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகளையும், பாராட்டுதல்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

புதிய நிர்வாகிகளுக்கு கழகத் தோழர்கள் அனைவரும் முழு ஒத்துழைப்பு நல்கிட வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன் என தெரிவித்துள்ளார்.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

இந்தியா

144 பயணிகளுடன் 2.35 மணி நேரமாக வானில் வட்டமடித்த விமானம்… பத்திரமாக தரையிறக்கம்

திருச்சி சர்வதேச விமான நிலையத்தில் இருந்து புறப்பட்ட விமானம் தொழில் நுட்பகோளாறு காரணமாக, சுமார் 2 மணி நேரம் 35 நிமிடமாக வானத்திலேயே வட்டமடித்து கொண்டு இருந்த
இந்தியா

குடிமக்கள் கொண்டாட்டம் டாஸ்மாக் கடை திறப்பதற்கு முன்பே விற்பனை ஆரம்பம்

டாஸ்மாக் கடைகள் 12 மணிக்கு திறக்கப்படுவதே வழக்கமாக இருந்து வருகின்றது ஆனால், தீபாவளி தினமான இன்றைய தினம் விதி மீறப்பட்டு மது விற்பனை ஆகா… ஓகோ…. என