முக்கிய செய்திகள்

யாழ் இந்துக் கல்லூரியின் இயக்கம் மற்றும் தயாரிப்பில் உருவான டெங்கு விழிப்புணர்வு ஆவணப்படம் வெளியிடப்பட்டது

யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி ஒளிப்படக்கலைக் கழகத்தின் தயாரிப்பு மற்றும் ஒளிப்படமாக்கலில் உருவான டெங்கு விழிப்புணர்வு தொடர்பான ஆவணக் குறும்படம் கடந்த திங்கட்கிழமை (20) வெளியிடப்பட்டது.

யாழ்.மாநகர சுகாதார வைத்திய அதிகாரி பிரிவினரின் ஏற்பாட்டில் யாழ். இந்துக் கல்லூரி சபாலிங்கம் அரங்கில் இந்த நிகழ்வு நடைபெற்றது.

யாழ். பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் பிரதம விருந்தினராக கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் சிறப்பு விருந்தினராக கலந்துக்கnண்டார்

இந்த நிகழ்வில் படத் தயாரிப்பு மற்றும் படப்பிடிப்பில் ஈடுபட்ட இந்துக் கல்லூரி ஒளிப்பட கழக மாணவர்களுக்கு பிரதம விருந்தினர் சான்றிதழ் வழங்கிக் கௌரவித்தார்.

அத்துடன் இந்துக் கல்லூரி ஒளிப்படக் கழகத்துக்கான கேடயமும் பிரதம விருந்தினரால் வழங்கி வைக்கப்பட்டது.

இந்த ஆவணப்படத்தில் பங்குபற்றிய சுகாதாரத்துறை பணியாளர்கள் ஏனைய விருந்தினர்களால் சான்றிதழ் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.

இந்த டெங்கு ஆவண குறும்படத்துக்காக முழுமையான ஒத்துழைப்பையும் ஆதரவையும் யாழ். மாநகர சுகாதார வைத்திய அதிகாரி மருத்துவர் த.தவரூபன் வழங்கியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

உள்ளூர் முக்கிய செய்திகள்

சீனாவில் பரவி வரும் HMPV வைரஸ் தொடர்பில் அச்சமடைய தேவையில்லை

இத்தினங்களில் சீனாவில் பரவி வரும்  HMPV வைரஸ், கடந்த காலங்களில் இலங்கையிலும் அடையாளம் காணப்பட்ட வைரஸ் நோய் நிலைமையாகும் என வைத்திய ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்த
உள்ளூர் முக்கிய செய்திகள்

அநுர அரசுக்கு சவால் விடுத்த முன்னாள் அமைச்சர் பந்துல குணவர்த்தன!

அரசாங்கம் நாட்டை ‘சுத்தம்’ செய்யப் போகிறது என்றால் முதலில் இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையிலான ஒப்பந்தங்களில் உள்ள மோசடிகளை சுத்தம் செய்ய வேண்டும் என முன்னாள் அமைச்சர் பந்துல