ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் எதிர்வரும் உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தலில் பல இடங்களில் தனித்தும், சில இடங்களில் கூட்டாகவும் போட்டியிடவுள்ளதாக அறிவித்துள்ளது.
உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தல் சம்பந்தமாக கட்சியின் தலைவரும் கண்டி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான ரவூப் ஹக்கீம் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்
உள்ளூராட்சிமன்றத் தேர்தல் தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தலுக்கான வேட்புமனுக்கள் பெப்ரவரிக்குப் பின்னர் கோரப்படும் என்று எதிர்பார்க்கின்றோம்.
அந்த வகையில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கொழும்பு, கண்டி, மற்றும் கிழக்கு மாகாணம் உள்ளிட்ட பகுதிகளில் தனியாக போட்டியிட வேண்டுமென கட்சிப் போராளிகளிடத்திலிருந்து கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டுள்ளன.
அத்துடன் உள்ளூராட்சிமன்றத் தேர்தலில் தனித்தும், கூட்டாகவும் போட்டி ;
குறித்த தேர்தல் முறைமைக்கு அமைவாக பல இடங்களில் தனித்தும், சில இடயங்களில் ஐக்கிய மக்கள் சக்தி தலைமையிலான கூட்டணியுடன் இணைந்தும் போட்யிடுவது தொடர்பில் கவனம் செலுத்தியுள்ளதாக அவர் மேலுமம் தெரிவித்துள்ளார்