சீன கம்யூனிஸ்ட் கட்சிக்கும் மக்கள் விடுதலை முன்னணிக்கும் (ஜே.வி.பி) இடையிலான அரசியல் ஒப்பந்தத்தை நிறைவு செய்வதற்காக மக்கள் விடுதலை முன்னணியின் பொதுச் செயலாளர் ரில்வின் சில்வா சீனாவுக்கு விஜயம் செய்யவுள்ளார்
இந்த விஜயத்திற்கான திகதி இன்னும் நிறைவுப்படுத்தப்படாத நிலையில் பெரும்பாலும் எதிர்வரும் ஏப்ரல் மாத்திற்கு முன்னர் இந்த விஜயம் இடம்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவின் சீன விஜயத்தின் போது 15 ஒப்பந்தங்கள் கைச்சாத்திடப்பட்டுள்ளது
ஆயினும இவ் ஒப்பந்தங்களில் இரண்டு பற்றி மட்டுமே அரசாங்கம் தகவல்களை வெளியிட்டுள்ளது
எனினும் சீன கம்யூனிஸ்ட் கட்சிக்கும் மக்கள் விடுதலை முன்னணிக்கும் இடையிலான புரிந்துணர்வு ஒப்பந்தம் தொடர்பிலும் ஜனாதிபதி அநுரவுடன் கலந்துரையாடப்பட்டுள்ளது.
அத்துடன் அரசியல் ரீதியிலான பரிமாற்றங்கள் மற்றும் ஒத்துழைப்புகள் உள்ளடங்களாக இருகட்சிக்கும் இடையில் பரஸ்பர ஒத்துழைப்புகளை விரிவுப்படுத்தும் வகையில் இந்த புரிந்துணர்வு ஒப்பந்தம் கைச்சாத்திடப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
