யாதொரு விசாரணைகளிலும் அரசாங்கம் தலையிடாத போதும் விசாரணைகளை மேற்கொள்பவர்களை பலப்படுத்துவதற்கு நடவடிக்கை மட்டுமே எடுக்கப்படும் என ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.
ஹோமாகம – பிட்டிபன பகுதியில் நேற்று இடம்பெற்ற மக்கள் சந்திப்பொன்றில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே ஜனாதிபதி இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இதன்போது கடந்த 9 வருடங்களாக மறைக்கப்பட்டிருந்த கோவைகள் தூசி தட்டி திறக்கப்பட்டு சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாப தெரிவித்துள்ளார்
அரசாங்கம் எந்தவொரு நபர்களையோ, வழக்குகளையோ தெரிவு செய்வதில்லையெனவும் உரிய வகையில் விசாரணைகளை முன்னெடுக்குமாறு மாத்திரமே சட்ட அமுலாக்க நிறுவனங்களுக்கு ஆலோசனை வழங்கியுள்ளதாக ஜனாதிபதி மேலும் தெரிவித்துள்ளார்