அநுரகுமார திசாநாயக்க வாக்குறுகளை அள்ளி வழங்கியதை போன்று காலம் தாழ்த்தாது உடனடியான வேலைவாய்ப்புக்களை வழங்குமாறு வடகிழக்கு பட்டதாரிகள் ஒன்றியத்தின் உறுப்பினர் எம்.ஐ.எம். புர்கான் கோரிக்கை விடுத்துள்ளார்.
திருகோணமலையில் இன்று ஞாயிற்றுக்கிழமை (26) நடைபெற்ற ஊடக சந்திப்பின்போதே இவ்வாறு தெரிவித்தார்.
தொடர்ந்து அவர் தெரிவிக்கையில்,
அரசாங்கத்தின் அசமந்தப் போக்கு காரணமாக வேலையற்ற பட்டதாரிகள் பல துன்பங்களை அனுபவித்து வருகிறார்கள்.
பொருளாதார நெருக்கடி, ஈஸ்டர் தாக்குதல், டெங்கு, கொரோனா என பல சவால்களுக்கு முகங்கொடுத்துள்ள பட்டதாரிகள் சுமார் 4, 5 வருடம் கற்றும் வேலையின்றி தவிப்பதாக தெரிவித்துள்ளனர்
30 ஆயிரம் ஆசிரிய வெற்றிடங்களும் 3000 ற்கும் மேற்பட்ட கிராம சேவகர்களுக்கான வெற்றிடங்கள் இருப்பதாகவும் கூறுகின்றனர்.
இதனை பட்டதாரிகளுக்கு பரீட்சை இன்றி பொது நியமனங்கள் ஊடாக அரச துறையில் நியமனங்களை வழங்க வேண்டும் என வடகிழக்கு பட்டதாரிகள் ஒன்றியம் வேண்டுகோள் விடுத்துள்ளனர்