முக்கிய செய்திகள்

தொழிற்சங்க போராட்டம் நடத்தப்படுமென கொள்கலன் லொறி சாரதிகள் சங்கம் எச்செரிக்கை

துறைமுகத்தில் கொள்கலன்களை அகற்றுவதில் ஏற்படும் தாமதங்கள் இந்த வாரத்திற்குள் தீர்க்கப்படாவிட்டால் தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபடப்போவதாக கொள்கலன் லொறி சாரதிகள் சங்கம் எச்சரித்துள்ளது.

ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட கொள்கலன் லொறி உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் சனத் மஞ்சுள, கொள்கலன்களை அகற்றுவதில் ஏற்படும் தாமதங்கள் கொள்கலன் லொறி சாரதிகளை கடுமையாக சிரமப்படுத்துவதாகக் குறிப்பிட்டார்.

இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,

அடிப்படை சுகாதார வசதிகள் இல்லாதது உட்பட லொறி சாரதிகள் பல சிரமங்களை எதிர்கொண்டுள்ளனர்.

இந்த வாரத்திற்குள் இந்த தாமதங்கள் தீர்க்கப்படாவிட்டால் தொழிற்சங்க நடவடிக்கைகளில் ஈடுபடுவோம்.

தொழிற்சங்க நடவடிக்கை இறக்குமதி மற்றும் ஏற்றுமதி துறைகள் இரண்டையும் பாதிக்கும். சம்பந்தப்பட்ட நிறுவனங்களுக்கிடையேயான ஒருங்கிணைப்பு இல்லாததே தாமதத்திற்கு வழிவகுத்துள்ளன.

சுங்கத்துறைக்கு அப்பால் அதனுடன் தொடர்புடைய பிற அரச நிறுவனங்களும் 24 மணி நேரமும் பணியாற்ற வேண்டும்.

பிரச்சினையை தீர்க்க பாதுகாப்புப் படையினரை அரசாங்கம் கடமைகளில் ஈடுபடுத்த வேண்டும் என தெரிவித்துள்ளார்.

 

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

உள்ளூர் முக்கிய செய்திகள்

சீனாவில் பரவி வரும் HMPV வைரஸ் தொடர்பில் அச்சமடைய தேவையில்லை

இத்தினங்களில் சீனாவில் பரவி வரும்  HMPV வைரஸ், கடந்த காலங்களில் இலங்கையிலும் அடையாளம் காணப்பட்ட வைரஸ் நோய் நிலைமையாகும் என வைத்திய ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்த
உள்ளூர் முக்கிய செய்திகள்

அநுர அரசுக்கு சவால் விடுத்த முன்னாள் அமைச்சர் பந்துல குணவர்த்தன!

அரசாங்கம் நாட்டை ‘சுத்தம்’ செய்யப் போகிறது என்றால் முதலில் இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையிலான ஒப்பந்தங்களில் உள்ள மோசடிகளை சுத்தம் செய்ய வேண்டும் என முன்னாள் அமைச்சர் பந்துல