இலங்கைக் கடற்பரப்பரப்புக்குள் அத்துமீறி மீன்பிடியில் ஈடுப்பட்ட தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் துப்பாக்கிச் பிரயோகம் மேற்கொண்டமைக்கு இந்தியா கடும் கண்டனம் வெளியிட்டுள்ளது
யுhழ்ப்பாணத்தின் நெடுந்தீவு கடற்பரப்புக்குள் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்ட 13 இந்திய மீனவர்களை இன்று (28) அதிகாலை கடற்படையினர் கைது செய்ய முற்பட்டபோது இலங்கை கடற்படையினர் துப்பாக்கி பிரயோகம் செய்துள்ளனர்
இதன்போது இரண்டு மீனர்வர்கள் படுகாயமடைந்த அதேவேளை மூவருக்கு சிறு காயங்களும் ஏற்பட்ட நிலையில், யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை அனுமதிக்கப்பட்டுள்ளனர்
இந்திய துணைத்தூதவர் சாய் முரளி காயமடைந்த மீனவர்களை வைத்தியசாலைக்குச் சென்று பார்வையிட்டு நலம் விசாரித்து, மீனவர்களுக்கு; அனைத்து உதவிகளையும் செய்து வருகின்றனர்.
இந்த சம்பவம் தொடர்பில் இன்றையதினம் புதுடெல்லியில் உள்ள இலங்கையின் பதில் உயர்ஸ்தானிகரை நேரில் அழைத்து இந்திய வெளிவிவகார அமைச்சு கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
கொழும்பில் உள்ள இந்திய உயர்ஸ்தானிகராலயமும் இலங்கை அரசாங்கத்தின் வெளிவிவகார அமைச்சிடம் இந்த விடயம் தொடர்பில் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
வாழ்வாதார பிரச்சினை என்பதால் மனிதாபிமான முறையில் மீனவர்களின் பிரச்சினையை கையாள வேண்டும் எனவும் எந்த ஒரு சூழ்நிலையிலும் இத்தகைய தாக்குதல்களை ஏற்றுக் கொள்ள முடியாது என இந்தியா கடும் தொனியில் தெரிவித்துள்ளது
இரு அரசாங்கங்களுக்குமிடையில் மேற்கொள்ளப்பட்டுள்ள புரிந்துணர்வு ஒப்பந்தங்களை கண்டிப்பாக கடைப்பிடிக்கப்பட வேண்டும் என இந்தியா வலியுறுத்தியுள்ளது

