தேர்தல் காலத்தில் மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகள் அரசு நிறைவேற்றாது இழுத்தடிப்பு செய்து வருவதாக எதிர்கட்சி தலைவர் குற்றம் சுமத்தியுள்ளார்
மக்களுக்கு நிறைவேற்ற முடியாத எதிர்பார்ப்புகளை வழங்கி விட்டு தற்போது அரசு திணறுகின்றது
வலுவான வேலைத்திட்டமும் அதற்குத் தேவையான தொலைநோக்குப் பார்வையும் இந்த அரசாங்கத்திடம் இல்லை என எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.
கம்பஹா, மாவட்டத்தில் இன்று (28) ஏற்பாடு செய்யப்பட்ட மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இவ்வாறு தெரிவித்தார்.
அநுரவின் பேச்சுக்கள் நன்றாக இருந்தாலும் செயல் பலவீனமாகவும் மெத்தன போக்கிலும் காணப்படுகின்றது என சஜித் பிரேமதாஸ மேலும் தெரிவித்துள்ளார்