உள்ளூர் முக்கிய செய்திகள்

இலங்கை தமிழரசுக் கட்சியின் மூத்த தலைவர் மாவை சேனாதிராஜா இயற்கை எய்தினார்!

இலங்கை தமிழரசுக் கட்சியின் மூத்த தலைவர் மாவை சேனாதிராஜா 28.01.2025 காலை தெல்லிப்பளை ஆதார வைத்தியசாலையில் இருந்து மேலதிக சிகிச்சைக்காக அனுப்பிவைக்கப்பட்ட நிலையில் CT SCAN பரிசோதனையில் வைத்திய நிபுணர்கள் தலையில் கணிசமான அளவில் இரத்தப் பெருக்கு இருப்பதை கண்டறிந்தனர்.

அவருக்கு மூளையில் ஏற்பட்ட இரத்த கசிவு காரணமாக ஆபத்தான நிலையில் செயற்கை சுவாச உதவியுடன் சிகிச்சையளிக்கப்பட்டது.

இலங்கை தமிழரசுக் கட்சியின் மூத்த தலைவரும் முன்னால் நாடாளுமன்ற உறுப்பினறுமான மாவை சேனாதிராஜா வீட்டில் தவறி விழுந்த நிலையில் தலையில் நரம்பு வெடிப்பு ஏற்பட்டு வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் இன்று காலமாகியுள்ளார்.

மாவை சேனாதிராஜாவின் இயற்பெயர் சோமசுந்தரம் சேனாதிராஜா.
இவர் யாழ்ப்பாண மாவட்டம், மாவிட்டபுரத்தில் 1942 அக்டோபர் 27 இல் பிறந்தார்.
வீமன்காமம் பாடசாலையிலும், நடேஸ்வராக் கல்லூரியிலும் கல்வி கற்ற பின்னர் இலங்கைப் பல்கலைக்க்ழகத்தில் வெளிவாரி மாணவராக இணைந்து இளங்கலைப் பட்டம் பெற்றார்

சேனாதிராசா இலங்கைத் தமிழ்த் தேசிய இயக்கத்தில் செயல்பட்டு 1961 சத்தியாக்கிரகப் போராட்டத்தில் பங்குபற்றினார்.

இலங்கைத் தமிழரசுக் கட்சியின் இளைஞர் அணியில் 1962 இல் இணைந்தார்.
1966 முதல் 1969 வரை ஈழத்தமிழர் இளைஞர் இயக்கத்தின் செயலாளராகப் பணியாற்றினார்.

1969 முதல் 1983 வரையான காலப்பகுதியில் இலங்கை அரசால் கைது செய்யப்பட்டு எட்டு வௌ;வேறு சிறைச்சாலைகளில் மொத்தம் ஏழாண்டுகள் சிறையில் கழித்தார்.

1972 இல் தமிழர் விடுதலைக் கூட்டணியின் தமிழ் இளைஞர் பேரவையின் செயலாளராக நியமிக்கப்பட்டார்.

சேனாதிராஜா 1989 நாடாளுமன்றத் தேர்தலில்

ஈஎன்டிஎல்எஃப்ஃ, ஈபிஆர்எல்எஃப்ஃ, டெலோ,  தவிகூ கூட்டணி சார்பில் யாழ்ப்பாண மாவட்டத்தில் போட்டியிட்டு கூட்டணியின் வேட்பாளர்களில் 13வதாக வந்து தோல்வியடைந்தார்.

ஆனாலும், அ. அமிர்தலிங்கம் 1989 யூலை 13 படுகொலை செய்யப்பட்டதை அடுத்து அவரின் இடத்திற்கு சேனாதிராசா தேசியப்பட்டியல் மூலம் நாடாளுமன்றத்திற்குத் தெரிவு செய்யப்பட்டார்.

1999 யூலை 29 இல் நீலன் திருச்செல்வம் படுகொலை செய்யப்பட்டதை அடுத்து மீண்டும், தேசியப் பட்டியல் மூலம் நாடாளுமன்றம் சென்றார்

2000-ஆம் ஆண்டு தேர்தலில் தமிழர் விடுதலைக் கூட்டணி (தவிகூ) வேட்பாளராக யாழ் மாவட்டத்தில் போட்டியிட்டு வெற்றிபெற்று மீண்டும் நாடாளுமன்றம் சென்றார்.

2001 அக்டோபர் 20 இல் அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸ், ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி, தமிழீழ விடுதலை இயக்கம், தவிகூ ஆகிய கட்சிகள் இணைந்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு (ததேகூ) என்ற கூட்டமைப்பை நிறுவின.

2001 தேர்தலில் ததேகூ சார்பாக யாழ் மாவடத்தில் போட்டியிட்டு மீண்டும் நாடாளுமன்றம் சென்றார்.

2004, 2010, 2015 தேர்தல்களில் மீண்டும் போட்டியிட்டு வெற்றி பெற்றார.

செப்டம்பர் , 2014இல் சேனாதிராசா இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவராக தெரிவு செய்யப்பட்டார்.

இந்நிலையில் கடந்த 2024 ஆம் ஆண்டு தமிழரசுக்கட்சிக்குள் ஏற்பட்ட முரண்பாட்டு நிலமையினால் அவர் தனது பதவியை இராஜினாமா செய்வதாக அறிவித்திருந்தார்.

இந்நிலையில் கடந்த 28ஆம் திகதி அவரது வீட்டில் தவறி விழுந்த நிலையில் தலையில் நரம்பு வெடிப்பு ஏற்பட்டு வைத்திய சாலையில் அதி தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் இன்று உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

https://graphicsland.lk/

https://www.youtube.com/@pathivunews/videos

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

உள்ளூர்

ராஜபக்ஷக்களுக்கு எதிரான ஊழல்களின் விசாரணைகள் ஆரம்பிக்கப்ட்டுள்ளது

கடந்த காலத்தில் சர்ச்சைகளை ஏற்படுத்திய ராஜபக்ஷக்களுக்கு எதிரான அனைத்து ஊழல் மற்றும் மோசடி வழக்குகள் தொடர்பான விசாரணைகள் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தேசிய மக்கள் சக்தியின் தேசிய செயற்குழு
உள்ளூர்

முல்லைத்தீவில் வர்த்தக நிலையமொன்று தீக்கிரையானது

முல்லைத்தீவு சிலாவத்தை பகுதியில் கடை ஒன்று எரிந்த சம்பவம் செவ்வாய்க்கிழமை (08) அதிகாலை இடம்பெற்றுள்ளது. முல்லைத்தீவு சிலாவத்தை சந்தைக்கு முன்பாக அமைந்துள்ள பலசரக்கு கடை ஒன்றும் அதனுடன்