கடந்த கால கசப்புக்களை மறந்து மீண்டும் கட்சியில் ஒன்றிணையுமாறு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ பொதுஜன பெரமுனவின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு பகிரங்க அழைப்பு விடுத்துள்ளார்.
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவுக்கும், ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் உறுப்பினர்களுக்கும், முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான புதிய ஜனநாயக முன்னணியின் (சிலிண்டர்) உறுப்பினர்களுக்கும் இடையிலான சந்திப்பு நேற்று திங்கட்கிழமை (27) கொழும்பு விஜேராம மாவத்தையில் உள்ள மஹிந்த ராஜபக்ஷவின் உத்தியோகபூர்வ இல்லத்தில் நடைபெற்றது.
இடம்பெறவுள்ள உள்ளுராட்சி மன்றத் தேர்தலில் ஒன்றிணைந்து போட்டியிடுவது தொடர்பிலும் உத்தேச மாகாண சபைத் தேர்தலில் போட்டியிடுவது தொடர்பில் கலந்துரையாடப்பட்டுள்ளது.
எதிர்வரும் காலப்பகுதிகளில் மாவட்ட மட்டத்தில் புதிய தொகுதிகளை அமைப்பதற்கும் இதன்போது அவதானம் செலுத்தப்பட்டுள்ளது.