உலகின் ஒரே 10 நட்சத்திர அந்தஸ்து கொண்ட ஓட்டல் என அழைக்கப்படுவது துபாயில் அமைந்துள்ள ஜூமேரா புர்ஜ் அல் அரப் ஓட்டலாகும்.
துபாயில் ஏற்கனவே புர்ஜ் கலிபா போன்ற உயரமான கட்டிடங்கள் உள்ள நிலையில், அங்கு செயற்கையாக உருவாக்கப்பட்ட ஒரு தீவில் இந்த ஓட்டல் கட்டப்பட்டுள்ளது.
இந்த ஓட்டலின் உயரம் 321 மீட்டர் ஆகும்.
இங்கு ஒரு நாள் இரவு தங்குவதற்கு 30 லட்சம் (இலங்கை ரூபாயில்) செலவாகும்.
இங்கு வரும் விருந்தினர்களுக்கு பல சொகுசு விடுதிகள், பிரைவேட் பீச், நீச்சல் குளங்கள், தங்க பேசியல், டைமண்ட் மசாஜ் உள்ளிட்ட ஆடம்பர வசதிகள் உள்ளன.
ஓட்டலுக்கு வரும் விருந்தினர்களுக்கு தனியாக ஒரு உதவியாளர் நியமிக்கப்படுவார்.
இந்த உதவியாளர் 24 மணிநேரமும் விருந்தினர்களுக்கு உதவ தயாராக இருப்பார்.
இந்த ஓட்டலில் ஒரு விருந்தினருக்கு 8 ஊழியர்கள் இருப்பார்கள்.
ஓட்டலின் மேல்தளம் மட்டும் 10 சதுர மீட்டர் அளவுக்கு பரந்து விரிந்த இடவசதி கொண்டது.
கடலில் இருந்து 100 மீட்டர் தொலைவில் இருப்பதால் அலைகளுக்கு மேல் மிதப்பதை போன்ற அனுபவத்தை விருந்தினர்களுக்கு வழங்குகிறது.
இங்கு 8 உலகத்தரம் வாய்ந்த விடுதிகளும் உள்ளன.
அதில், ஒரு உணவு விடுதி நீருக்கு அடியில் உள்ளது.
இங்கிருந்து விருந்தினர்கள் கடல்வாழ் உயிரினங்களை கண்ணாடி ஜன்னல் வழியாக பார்த்து கொண்டே சுவையான உணவுகளை சாப்பிட முடியும் என்றால் பாருங்களன்


