சர்ச்சைக்குரிய 323 கொள்கலன்களும் சட்ட விதிமுறைகளுக்கு அமையவே விடுவிக்கப்பட்டுள்ளது.
இந்த விடயத்தில் மோசடி இடம்பெற்றுள்ளதாக கூறுபவர்கள் உரிய சாட்சியங்களுடன் அது தொடர்பில் முறைப்பாடு செய்ய வேண்டுமே தவிர குற்றச்சாட்டுக்களை சுமத்துவதில் பயனில்லையென்கிறார் போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சர் பிமல் ரத்நாயக்க
அவர் இது தொடர்பில் கருத்து வெளியிடுகையில்
சர்ச்சைக்குரிய 323 கொள்கலன்களும் சட்ட விதிமுறைகளுக்கு அமையவே விடுவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் இந்த விடயம் தொடர்பில் சுங்கத்திணைக்களமும் தெளிவுப்படுத்தியுள்ளது.
சுங்கத் திணைக்களத்தின் விசேட அதிகாரிகள் குழுவினால் இந்த கொள்கலன்கள் விடுவிக்கப்பட்டுள்ளன.
அவசர நிலைமை ஒன்றின் போது எவ்வாறு செயல்பட வேண்டும் என்பதை சுங்கத் திணைக்கள அதிகாரிகள் அறிந்துள்ளார்கள் என அமைச்சர் பிமல் சுட்டிக்காட்டியுள்ளார்.
துறைமுகத்திற்குள் மோசடி இடம்பெறுவதாகவும் அது தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் ஊடகமொன்று செய்தி வெளியிட்டு இருந்தது.
அண்மையில் புகையிரத ஈ- பயணச்சீட்டில் மோசடி இடம்பெறுவதாக கூறப்பட்டது.
தற்போது விசாரணைகள் இடம்பெறுகின்றன. சந்தேகபர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்த விடயத்தில் தொடர்புடைய அனைவரையும் நாம் கைது செய்வோம். எவரையும் தப்பிச்செல்ல இடமளிக்க போதவில்லையென போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சர் பிமல் ரத்நாயக்க மேலும் தெரிவித்துள்ளார்