மாவை சேனாதிராசா 1942 ம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 27 ம் திகதி யாழ்ப்பாணத்தில் மாவிட்டபுரத்தில் பிறந்தார்.
மாவையண்ண மாவை மாவை சேனாதிராஜா என அவர் அழைக்கப்பட்டாலும் அவரின் இயற் பெயர் சோமசுந்தரம் சேனாதிராஜா என்பதாகும் ஆகும்
இவர் யாழ்ப்பாணத்தில் வீமன்காமம் பாடசாலையிலும், நடேஸ்வராக் கல்லூரியிலும் கல்வி கற்றார்.
பின்னர் இலங்கைப் பல்கலைக்கழகத்தில் வெளிவாரி மாணவராக இணைந்து இளங்கலைப் பட்டம் பெற்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது
மாவை சேனாதிராஜா 1961 ம் ஆண்டு நமைப்பெற்ற சத்தியாக்கிரகப் போராட்டத்தில் பங்குபற்றி அரசியல் பிரவேசத்தை மேற்கொண்டார்
அதன் பின் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் இளைஞர் அணியில் 1962 இல் இணைந்து கொண்டார்
1966 ஆண்டு தொடக்கம் 1969 வரை ஈழத்தமிழர் இளைஞர் இயக்கத்தின் செயலாளராகப் பணியாற்றினார்.
அதன் பின்னர் அவரது தீவிர தமிழ் தேசிய அரசியல் செயற்பாட்டின் மீது அதிருப்தி கொண்ட சிறிலங்கா அரச படையினரால் கைது செய்யப்பட்டார்.
கைதின் பின் 1969 ம் ஆண்டு தொடக்கம் 1983 வரையான காலப்பகுதியில் ஏறத்தாழ 08 ஆண்டுகளாக நாட்டின் வௌ;வேறு சிறைச்சாலைகளில் அடைக்கப்பட்டிருந்தார்
1972 இல் தமிழர் விடுதலைக் கூட்டணியின் தமிழ் இளைஞர் பேரவையின் செயலாளராக நியமிக்கப்பட்டார
மாவை சேனாதிராசா 1989 நாடாளுமன்றத் தேர்தலில் பல கட்சிகளின் அன்றைய கூட்டான தவிகூ கூட்டணி சார்பில் யாழ்ப்பாண மாவட்டத்தில் போட்டியிட்ட போதும் அதில் அவர் தோல்வியடைந்தார்
அதன் பின் தளபதி அமிர்தலிங்கம் 1989 சூலை 13 ம் திகதி படுகொலை செய்யப்பட்டதையடுத்து அவரின் இடத்திற்கு சேனாதிராசா தேசியப்பட்டியல் மூலம் நாடாளுமன்றத்திற்குத் தெரிவு செய்யப்பட்டார்.
பின்னர் அடுத்த பாராளுமன்றத்திலும் 1999 சூலை ம் திகதி நீலன் திருச்செல்வம் படுகொலை செய்யப்பட்டதை அடுத்து மீண்டும், தேசியப் பட்டியல் மூலம் நாடாளுமன்றம் சென்றார் மாவை சேனாதிராஜா.
2000-ஆம் ஆண்டு நடைப்பெற்ற நாடாளுமன்ற தேர்தலில் தமிழர் விடுதலைக் கூட்டணி சார்பில் வேட்பாளராக யாழ் மாவட்டத்தில் களமிரங்கிய மாவை சேனாதிராஜா வெற்றிபெற்றார்.
அதன் பின் தமிழ் தேசிய அரசியலில் மிகப்பெரிய மாற்றம் ஏற்பட்டது.
தமிழீழ விடுதலைப் புலிகளின் ஆலோசனை மற்றும் வழி நடத்தலில் 2001 ஆண்டு ஒக்டோபர் மாதம் அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸ், ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி, தமிழீழ விடுதலை இயக்கம், தவிகூ ஆகிய கட்சிகள் இணைக்கப்பட்டு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அதாவது டிஎன்ஏ என்ற கூட்டமைப்பை; நிறுவப்பட்டது
2001 தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சார்பாக யாழ் மாவட்டத்தில் போட்டியிட்டு மீண்டும் நாடாளுமன்றம் சென்றார்.
அதன் பின் நடைப்பெற்ற பாராளுமன்ற தேர்தல்களில் அதாவது
2004, 2010,2015 ஆகிய ஆண்டுகளில் நடைப்பெறற தேர்தல்களில் மீண்டும் மீண்டும் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.
2020 ம் ஆண்டு நடைப்பெற்ற தேர்தலில் தோல்வியடைந்த பின்னர் தேர்தல் அரசியலில் இருந்து விலகிய அவர் கடசி செயற்பாட்டில் அரசியல் பணியாற்றினார்
பின் 2014 செப்டம்பரில் மாவை சேனாதிராஜா இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவராகத் தெரிவு செய்யப்பட்டார்.
பின்னர் இலங்கைத் தமிழரசுக் கட்சியில் ஏற்பட்ட உள்ளக முரண்பாடுகள் உச்சமடைந்திருந்த சூழலில் கடந்த 2024 ம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 7 ம் திகதி அன்று தமிழரசுக் கட்சியின் தலைவர் பதவியில் இருந்து விலகுவதாக அறிவித்தார்.
அகிம்சை வழி போராட்டத்தின் போதும் பின்னர் ஆயுத வழி போராட்டத்தின் பல்வேறு சந்தர்ப்பங்களில் சிறிலங்கா பொலிஸார் உட்பட்ட படைத்தரப்புடன் மோதி எதிர்த்தாடிய மாவை சேனாதிராஜாவின் வீரியமும் செயற்திறனும் இலங்கைத் தமிழரசுக் கட்சியில் 2010 ஆண்டின் பின் இணைந்தவர்களுடன் தோற்றது என சொல்வதற்கு முடியாத நிலையில் அது வலுப்பெற முடியாமல் போனது என சொல்லாம்.
அதற்கு அவரது உடல் நிலையும் வயோதிபமும் கூட ஒரு காரணமாக இருந்திருக்கலாம்.
அண்மையில் அதாவது கடந்த ஜனாதிபதி தேர்தலின் போதும் பாராளுமன்ற தேர்தலின் முன்னரும் தேர்தலின் பின்னரும் இலங்கைத் தமிழரசுக் கட்சிக்குள் எழுந்த உள்ளக முரண்பாட்டினால் கட்சிக்குள்ளேயும் கடசியின் சாதாரண உறுபப்pனர்களாலும் தமிழ் தேசிய ஆரவாளர்கள் மற்றும் பற்றாளர்களாலும் பெரிதும் விமர்சிக்கப்பட்ட நிலையில் மாவை சேனாதிராஜா மனம் நொந்து போயிந்ததாக அவருக்கு மிகவும் நெருக்கமாக இருந்தவர்கள் இறப்பின் பின்னர் வெளிப்படையாக அங்குமிங்கும் சொல்லித் திரிகின்றார்கள்.
இலங்கைத் தமிழரசுக் கட்சியின’ மத்தியகுழு கூட்டங்களின்போது சில சிரேஸ்ட்ட தலைவர்களாலும் 2010 ம் ஆண்டின் பின் இலங்கைத் தமிழரசுக் கட்சிக்குள் நுளைந்து பின் கட்சிக்குள் ஆதிக்கம் செலுத்தியவர்களாலும் மாவை சேனாதிராஜா ஓரம் கட்டப்பட்டதுடன் அவருக்கு கொடுக்க வேண்டிய கௌரவத்தையும் அவ்வாறானவர்கள் கொடுக்க தவறியதாக அரசல்புரசலாக குற்றம் சுமத்தப்படுகின்றது.
இந்நிலையில் மாவை சேனாதிராசா வீட்டில் தவறி விழுந்து தலையில் யாழ் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட போது தலையில் நரம்பு வெடிப்பு ஏற்பட்டுள்ளதாக வைத்தியர்களால் தெரிவிக்கப்பட்ட நிலையில் கடந்த 29 அன்று சிகிச்சை பலனின்றி அவரது 82 ஆவது வயதில் இயற்கையெய்தினார்.
தாயகத்திலிருந்து தாமரைச்செல்வன்