யுத்தத்தால் பாதிக்கப்பட்ட அதே வேளை அபிவிருத்தியில் பின்னடைவை சந்தித்துள்ள வடகிழக்கு மாகாணங்களை பொருளாதார ரீதியில் முன்னேற்றுவதே தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தினது நோக்கம் என ஜனாதிபதி தெரிவித்துள்ளார்
பொருளாதார ரீதியில் கிராமங்களை வலுப்பெற செய்வதே எமது நோக்கம் என ஜனாதிபதி அனுர குமார மேலும் தெரிவித்தார்.
யாழ்ப்பாணத்துக்கு இன்றைய தினம் (31) விஜயம் செய்த ஜனாதிபதி, யாழ். மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தின் போதே இவ்வாறு தெரிவித்துள்ளாhர்;.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
மக்களின் காணிகள் மக்களிடம் ஒப்படைக்கப்பட வேண்டும் என்பதில் மாற்றுக்கருத்துக்கு இடமில்லை.
ஆனால் காணிகள் பாதுகாப்பு தேவைக்காகவும் அபிவிருத்திக்காகவும் கையகப்படுத்தப்பட்டுள்ளதென ஜனாதிபதி தெரிவித்துள்ளார்
ஆரசாங்கத்தின் கொள்கை மக்களின் காணிகள் மக்களிடம் வழங்கப்பட வேண்டும் என தெரிவித்த ஜனாதிபதி காணி விடுவிப்பது தொடர்பில் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லையென்பது குறிப்பிடத்தக்கது