இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் மூத்த தலைவரான மாவை சேனாதிராஜாவுக்கு முல்லைத்தீவு நகரில் அமைந்துள்ள பிரதான சுற்றுவட்டப் பாதையில் இன்று (31) அஞ்சலி செலுத்தப்பட்டது.
முல்லைத்தீவு பிரதேச இலங்கை தமிழரசுக் கட்சித் தொண்டர்களின் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்த அஞ்சலி நிகழ்வில் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரனும் பங்கேற்றிருந்தார்.
துக்கத்தை பிரதிபலிக்கும் வகையில் முல்லைத்தீவு பிரதான சுற்றுவட்டப்பாதை வளாகம் கறுப்பு மற்றும் வெள்ளைக் கொடிகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளது.
அங்கு மாவை சேனாதிராஜாவின் திருவுருவப்படத்துக்கு மாலை அணிவிக்கப்பட்டு, மலர் தூவி உணர்வுபூர்வமாக அஞ்சலி செலுத்தப்பட்டது.
