வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் மற்றும் வடமாகாண ஆளுநர் நாகலிங்கம் வேதநாயகனுக்குமிடையில் நேற்று வெள்ளிக்கிழமை (31-02-2025) யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள ஆளுநர் அலுவலகத்தில் சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.
இந்தச் சந்திப்பில் விவசாயிகள் எதிர்நோக்கும் முக்கிய பிரச்சினைகள் மீனவர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் வெள்ள அனர்த்தம்காரணமாக ஏற்பட்டுள்ள நெல் அழிவுகளுக்குரிய இழப்பிடுகள் விவசாயிகளுக்கு உடனடியாக வழங்கப்படுதல், நெல்லுக்கான விலையை நிர்ணயித்தல், நெல் சந்தைப்படுத்தலில் காணப்படும் பிரச்சினைகளைத் தீர்தல், காட்டுயானைகளால் விவசாயிகள் எதிர்நோக்கும் பிரச்சினைகளைத் தீர்த்தல் உள்ளிட்ட பல்வேறு முக்கியவிடயங்கள் தொடர்பாக நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் ஆளுநர் நாகலிங்கம் வேதநாயகன் கவனத்திற்கு கொண்டு சென்றுள்ளார்
இந்தச் சந்திப்பில் முல்லைத்தீவுமாவட்ட கமக்காரஅமைப்புகளின் அதிகாரசபையின் தலைவர் பென்னம்பலம் சத்தியமூர்த்தி, உபதலைவர் இ.வேதநாதன் ஆகியோரும் கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
