பிரித்தானியாவில் உள்ள இலங்கை தூதரகத்திற்கு முன்பாக அந்நாட்டில் வசிக்கும் தமிழ் இளைஞர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
குறித்த போராட்டமானது நேற்றைய தினம் (04.02.2025) பிரித்தானியாவில் உள்ள இலங்கை தூதரகத்திற்கு முன்னால் இடம்பெற்றுள்ளது.

பிரித்தானியாவின் தமிழர் ஒருங்கிணைப்பு குழுவின் கீழ் குறித்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டிருந்த நிலையில் போராட்டத்தில் புலம்பெயர் தமிழ் இளைஞர்கள் பலரும் கலந்து கொண்டிருந்தனர்.
அத்தோடு, பிரித்தானியாவின் இலங்கை தூதரகத்தில் தமிழீழ விடுதலை புலிகளின் கொடியும் ஏற்றப்பட்டுள்ளது.

இதன்போது, ‘தமிழ் ஈழமே எமது நாடு’, ‘தமிழ் ஈழம் ஒன்றே ஒரே தீர்வு’ மற்றும் ‘தமிழர் உரிமைகளை உறுதி செய்’ போன்ற வாசகங்கள் பொறிக்கப்பட்ட பதாதைகளை ஆர்ப்பாட்டக்காரர்கள் ஏந்தியிருந்தனர்.

இந்நிலையில், அப்பகுதியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருந்தது.
இதேவேளை தமிழ் மக்கள் செறிந்து வாழும் வடக்கு கிழக்கு தமிழர் தாயகத்தில் இலங்கையின் சுதந்திர தினம் ஈழத்தமிழர்களின் கரிநாள் எனும் தொனிப்பொருளில் பாரிய போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
இதையும் படியுங்கள்>சுதந்திர தினத்தை கரி நாளாக பிரகடனப்படுத்திய யாழ். பல்கலைக்கழக மாணவர்களின் பிரகடனம் வாசிக்கப்பட்டது