முக்கிய செய்திகள்

யாழ்ப்பாணம் வட்டுக்கோட்டை துணைவி பிரகேதீஸ்வரர் ஆலயத்தினை மீள் கட்டுமான பணி ஆரம்பம்

கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் யாழ்ப்பாண மரபுரிமை மையத்தின் தலைவர் வாழ்நாள் பேராசிரியர் புஸ்பரட்ணம் தலைமையில் சம்பிரதாயபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்ட நிலையில் இப்பணிகள் ஆரம்பமானது.

மிகத் தொன்மையான எமது முன்னோர்களின் வழிப்பாட்டுத் தலமான இவ்வாலயம் பல ஆண்டு காலம் கவனிப்பார் இன்றிக் காணப்பட்ட நிலையில் அதனை மீள்உருவாக்கம் செய்வதற்கு நீண்ட காலம் முயற்சி எடுக்கப்பட்டது.

இந் நிலையில் தற்போது அமெரிக்காவில் வசிக்கின்ற கைதடியினைச் சேர்ந்த கலாநிதி சிவயோகநாதனின் மகள் பாலயோகஸ்தினி சிவயோகநாதன் இவ்வாலயத்தினை பழைய நிலைக்கு மீள் புனரமைப்பு செய்வதற்குரிய நிதியுதவியினை வழங்கியுள்ளார்.

வெள்ளிக்கிழமை இடம் பெற்ற இவ் வாலயத்தின் புனரமைக்கும் பணிகளில் மரபுரிமை மையத்தின் தலைவர் வாழ்நாள் பேராசிரியர் பரமு புஸ்பரட்ணம் மரபுரிமை மையத்தின் உபதலைவர் சத்திர சிகிச்சைப் பேராசிரியர் ரவிராஜ், இவ்வாலயத்தினை மீள் புனரமைப்பு செய்வதற்குரிய நிதி உதவியினை வழங்கிய பாலயோகஸ்தினி சிவயோகநாதன் தந்தை சிவயோகநாதன், யாழ்ப்பாணம் மரபுரிமை மையத்தின் செயலாளர் ரமேஸ், பேராதனைப் பல்கலைக்கழகத்தின் வரலாற்றுத்துறை சிரேஸ் விரிவுரையாளர் ஜெயதீஸ்வரன் இவ்வாலயத்தினை மீளுருவாக்கம் செய்யும் முக்கிய பணியில் இருக்கும் கபிலன், செல்வி துஸ்யந்தி, மணிமாறன் மற்றும் யாழ்ப்பாண மரபுரிமை மையத்தின் பத்திராசிரியர் பார்த்திபன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

 

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

உள்ளூர் முக்கிய செய்திகள்

சீனாவில் பரவி வரும் HMPV வைரஸ் தொடர்பில் அச்சமடைய தேவையில்லை

இத்தினங்களில் சீனாவில் பரவி வரும்  HMPV வைரஸ், கடந்த காலங்களில் இலங்கையிலும் அடையாளம் காணப்பட்ட வைரஸ் நோய் நிலைமையாகும் என வைத்திய ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்த
உள்ளூர் முக்கிய செய்திகள்

அநுர அரசுக்கு சவால் விடுத்த முன்னாள் அமைச்சர் பந்துல குணவர்த்தன!

அரசாங்கம் நாட்டை ‘சுத்தம்’ செய்யப் போகிறது என்றால் முதலில் இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையிலான ஒப்பந்தங்களில் உள்ள மோசடிகளை சுத்தம் செய்ய வேண்டும் என முன்னாள் அமைச்சர் பந்துல