இந்தியா முக்கிய செய்திகள்

ஆம் ஆத்மியின் முக்கிய தலைவர்கள் படுதோல்வி

டெல்லியில் நடைபெற்று முடிந்த சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்று பா.ஜ.க. தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்க இருக்கிறது. மொத்தமுள்ள 70 தொகுதிகளுக்கு கடந்த 5-ம் தேதி ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற்றது. இதைத் தொடர்ந்து நேற்று காலை முதல் பதிவான வாக்குகளை எண்ணும் பணிகள் தொடங்கின.

அதன்படி டெல்லியில் பாஜக மிகப்பெரிய வெற்றியைப் பெற்றுள்ளது. இறுதிகட்ட முடிவுகளின் படி பா.ஜ.க. 48 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது. இந்த நிலையில், ஆளும் கட்சியாக இருந்த ஆம் ஆத்மி கட்சியின் (யுயுP) ஐந்து முக்கியத் தலைவர்கள் நடைபெற்று முடிந்த தேர்தலில் படுதோல்வியை சந்தித்துள்ளனர்.

இவர்களில் ஆம் ஆத்மி கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கெஜ்ரிவால், மணீஷ் சிசோடியா மற்றும் முக்கிய அமைச்சர் சவுரப் பரத்வாஜ் ஆகியோர் அடங்குவர்.

தோல்வியடைந்த யுயுP-யின் முக்கியத் தலைவர்கள் விவரம்:

அரவிந்த் கெஜ்ரிவால்: டெல்லியில் கடந்த 2013, 2015 மற்றும் 2020 ஆகிய தேர்தல்களில் ஆம் ஆத்மி சார்பில் போட்டடியிட்டு கட்சியை வெற்றி பெற செய்த அரவிந்த் கெஜ்ரிவால் நடைபெற்று முடிந்த தேர்தலில் தன்னை எதிர்த்து போட்டியிட்ட பா.ஜ.க.வின் பர்வேஷ் வர்மாவிடம் தோல்வியை தழுவினார்.

மணீஷ் சிசோடியா: டெல்லியின் முன்னாள் துணை முதல்வரும் ஆம் ஆத்மி கட்சியின் முக்கிய தலைவருமான சிசோடியா, ஜங்புராவில் பா.ஜ.க. வேட்பாளர் தர்விந்தர் சிங் மர்வாவிடம் தோல்வியடைந்தார். கிழக்கு டெல்லியின் பட்பர்கஞ்சிலிருந்து மூன்று முறை எம்.எல்.ஏ.வாக இருந்த இவர், இந்த முறை தேர்தலுக்காக ஜங்புரா தொகுதியில் போட்டியிட முடிவு செய்தார்.

சவுரப் பரத்வாஜ்: முக்கிய ஆம் ஆத்மி கட்சி தலைவரான திரு. பரத்வாஜ், 2013 இல் கிரேட்டர் கைலாஷ் தொகுதியில் மூன்று முறை வெற்றி பெற்றார், ஆனால் இந்த முறை பா.ஜ.க.-வின் ஷிகா ராயிடம் தோல்வியை தழுவினார். இவரது தொகுதி ஆம் ஆத்மிக்கு பாதுகாப்பான இடமாகக் கருதப்பட்டது, எனினும், இங்கு பா.ஜ.க. வெற்றி பெற்று அந்த நிலையை மாற்றியது.

துர்கேஷ் பதக்: ஆம் ஆத்மி கட்சியின் உயர்மட்ட அமைப்புகள், அரசியல் விவகாரக் குழு மற்றும் தேசிய செயற்குழு உறுப்பினரான திரு. பதக், டெல்லியின் ராஜிந்தர் நகர் தொகுதியில் பா.ஜ.க.-வின் உமாங் பஜாஜிடம் தோல்வியடைந்தார். திரு. பதக் 2022 இல் நடந்த இடைத்தேர்தலில் அந்த இடத்தை வென்றார். இந்த முறை அவர் மீண்டும் பரிந்துரைக்கப்பட்டார், ஆனால் தோல்வியடைந்தார்.

சத்யேந்திர ஜெயின்: ஆம் ஆத்மி கட்சியின் உயர்மட்ட தலைவரும் டெல்லி முன்னாள் அமைச்சருமான சத்யேந்திர ஜெயின், டெல்லியின் ஷகூர் பஸ்தி தொகுதியில் தொடர்ச்சியாக இரண்டு முறை போட்டியிட்டு தோல்வியடைந்தார். அரவிந்த் கெஜ்ரிவால் அரசாங்கத்தில் கேபினட் அமைச்சராக இருந்த திரு. ஜெயின், 2022 இல் ஊழல் வழக்கில் கைது செய்யப்பட்டார். அவர் பா.ஜ.க.வின் கர்னைல் சிங்கிடம் தோல்விய தழுவினார்.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

இந்தியா

144 பயணிகளுடன் 2.35 மணி நேரமாக வானில் வட்டமடித்த விமானம்… பத்திரமாக தரையிறக்கம்

திருச்சி சர்வதேச விமான நிலையத்தில் இருந்து புறப்பட்ட விமானம் தொழில் நுட்பகோளாறு காரணமாக, சுமார் 2 மணி நேரம் 35 நிமிடமாக வானத்திலேயே வட்டமடித்து கொண்டு இருந்த
இந்தியா

குடிமக்கள் கொண்டாட்டம் டாஸ்மாக் கடை திறப்பதற்கு முன்பே விற்பனை ஆரம்பம்

டாஸ்மாக் கடைகள் 12 மணிக்கு திறக்கப்படுவதே வழக்கமாக இருந்து வருகின்றது ஆனால், தீபாவளி தினமான இன்றைய தினம் விதி மீறப்பட்டு மது விற்பனை ஆகா… ஓகோ…. என