முக்கிய செய்திகள்

வவுனியா பொலிஸார் அசமந்தம் மீண்டும் பாடசாலை மாணவன் மீது போத்தில் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது

வவுனியா வைரவபுளியங்குளத்தில் போதை ஆசாமிகள் உயர்தர வகுப்பு மாணவன் மீது கண்ணாடித் துண்டுகளால் வெட்டியதில் மாணவன் பலத்த காயமடைந்து சிகிச்சை பெற்றுள்ளார்.

நேற்று மாலை வைரவளியங்குளத்தில் உள்ள தனியார் கல்வி நிலையத்தில் கற்றல் செயற்பாட்டை முடித்து வீதியால் வந்து கொண்டிருந்த உயர்தர வகுப்பு மாணவன் மீது வைரவபுளியங்குளத்தில் வழமையாக கூடி நிற்கும் போதைக்கு அடிமையான இளைஞர்கள் குழு கண்ணாடி துண்டுகளால் வெட்டியுள்ளனர்.

இதன் காரணமாக மாணவன் காயம் அடைந்த நிலையில் அங்கு நின்றவர்களால் தனியார் வைத்தியசாலையில் சிகிச்சை அளிப்பதற்காக நம் மாணவனை பாதுகாப்பாக அழைத்துச் சென்றுள்ளனர்.

இந்நிலையில் குறித்த போதை ஆசாமிகள் தாக்குதலை நடத்தி விட்டு அங்கிருந்து தப்பி சென்றுள்ளதாகவும் அப்பகுதி மக்கள் தெரிவித்தனர்.

தொடர்ச்சியாக இந்த போதை அடிமையான இளைஞர்கள் குழு அப்பகுதியில் உள்ள தனியார் கல்வி நிலையங்களில் கற்றல் செயற்பாட்டை முடித்து வரும் மாணவர்கள் மீது தாக்குதலை நடத்துவது அண்மைக்காலமாக அதிகரித்துள்ளது.

இது தொடர்பில் வவுனியா பொலிசாரின் அசமந்தமாக காணப்படுவதாகவும் தெரிவிக்கின்றனர்.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

உள்ளூர் முக்கிய செய்திகள்

சீனாவில் பரவி வரும் HMPV வைரஸ் தொடர்பில் அச்சமடைய தேவையில்லை

இத்தினங்களில் சீனாவில் பரவி வரும்  HMPV வைரஸ், கடந்த காலங்களில் இலங்கையிலும் அடையாளம் காணப்பட்ட வைரஸ் நோய் நிலைமையாகும் என வைத்திய ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்த
உள்ளூர் முக்கிய செய்திகள்

அநுர அரசுக்கு சவால் விடுத்த முன்னாள் அமைச்சர் பந்துல குணவர்த்தன!

அரசாங்கம் நாட்டை ‘சுத்தம்’ செய்யப் போகிறது என்றால் முதலில் இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையிலான ஒப்பந்தங்களில் உள்ள மோசடிகளை சுத்தம் செய்ய வேண்டும் என முன்னாள் அமைச்சர் பந்துல