வவுனியா, தோணிக்கல் பகுதியில் 2 கிலோ கஞ்சாவுடன் இளைஞன் ஒருவன் இன்று கைது செய்யப்பட்டுள்ளதாக வவுனியா மாவட்ட பொலிஸ் குற்றப் புலனாய்வு பிரிவு பொலிஸார் தெரிவித்தனர்.
வவுனியா மாவட்ட பொலிஸ் குற்றப் புலனாய்வு பிரிவினருக்குக் கிடைத்த இரகசிய தகவலையடுத்து வன்னி மாவட்ட பிரதி பொலிஸ்மா அதிபர் சமந்த விஜசேகர அவர்களின் ஆலோசனையில், வவுனியா மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் அவர்களின் வழிநடத்தலில், வவுனியா மாவட்ட குற்ற விசாரணைப் பிரிவு பொறுப்பதிகாரி அழகியவண்ண தலைமையில் பொலிஸ் அதிகாரிகள் சிலர் இணைந்து விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கையினை மேற்கொண்டிருந்தனர்.
இதன்போது வவுனியா, தோணிக்கல் பகுதியில் 34 வயதுடைய ஒருவன் 2 கிலோ கஞ்சாவுடன் கைது செய்யப்பட்டுள்ளார்.
மேலதிக விசாரணைகளின் பின் இளைஞனை நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.