முக்கிய செய்திகள்

முன்னைய ஆட்சியில் 3 நாட்கள் மீடி பிடித்த தமிழக மீனவர்கள் எமது ஆட்சியில் 7 நாளும் மீன் பிடிக்கின்றார்கள்- அமைச்சர் சந்திரசேகர்

இலங்கையின் கடல் வளத்தை அழிதொழிக்கும் நடவடிக்கையில் தமிழக மீனவர்கள் ஈடுபட்டுள்ளனர் எனவும், இவ்வாறு நாசகார செயலில் ஈடுபட்டுவிட்டு செல்லும் வழியில் தொப்புள் கொடி உறவுகள் எனக் கூறுவதில் பயன் இல்லை எனவும் கடற்றொழில் மற்றும் நீரியல் கடல் வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்தார்.

தமிழக மீனவர்கள் அத்துமீறும் செயற்பாடு தொடர்பில் இன்று (12) ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போது அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் கூறுகையில்,

தமிழக மீனவர்களின் அத்துமீறல் அதிகரித்துள்ளது.
கடந்த காலங்களில் மூன்று நாட்கள் வந்தார்கள், தற்போது ஏழு நாட்களுக்கும் வருவதற்கு முற்படுகின்றார்கள்.
எமது நாட்டு மீன்களை பிடிப்பது மட்டுமல்ல கடல் வளத்தையே நாசம் செய்கின்றனர். இதனால் நாளைய தலைமுறையினருக்குரிய கடல் வளம் இல்லாமல் போகின்றது.

எனவே, இலங்கை எல்லைக்குள் வந்து மீன்பிடிக்க வேண்டாம் என தமிழக மீனவர்களிடம் கேட்டுக்கொள்கின்றோம்.
அதற்கான உரிமை அவர்களுக்கு கிடையாது. எமது நாட்டு கடல் எல்லைக்குள் வந்து மீன்களை பிடித்துக்கொண்டு செல்லும் வழியில் எங்களை தொப்புள்கொடி உறவுகள் எனக்கூறுவதில் பயன் இல்லை.

தமிழக மீனவர்கள் மீதோ, தமிழக தலைவர்கள் மீதோ எமக்கு எவ்வித கோபமும் இல்லை. ஒரு சில மீனவர்கள் தான் டோலர் படகுகளைப் பயன்படுத்தி, தடைசெய்யப்பட்ட வலைகளையும் பயன்படுத்தி எமது கடல் வளத்தை நாசமாக்குகின்றனர். அதனையே நாம் எதிர்க்கின்றோம்.

எமது நாட்டு எல்லைக்குள் அத்துமீறாவிட்டால் எவரையும் கைது செய்யவேண்டியது தேவைப்பாடு எழாது. எனவே, எங்களது கடல் எல்லைக்குள் புகுந்து, கடல் வளங்களை நாசமாக்க வேண்டாம் என போராடும் தமிழக மீனவர்களிடம் கேட்டுக்கொள்கின்றேன். அவர்கள் எல்லைத்தாண்டாவிட்டால் எவ்வித பிரச்சினையும் எழாது என்றார்.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

உள்ளூர் முக்கிய செய்திகள்

சீனாவில் பரவி வரும் HMPV வைரஸ் தொடர்பில் அச்சமடைய தேவையில்லை

இத்தினங்களில் சீனாவில் பரவி வரும்  HMPV வைரஸ், கடந்த காலங்களில் இலங்கையிலும் அடையாளம் காணப்பட்ட வைரஸ் நோய் நிலைமையாகும் என வைத்திய ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்த
உள்ளூர் முக்கிய செய்திகள்

அநுர அரசுக்கு சவால் விடுத்த முன்னாள் அமைச்சர் பந்துல குணவர்த்தன!

அரசாங்கம் நாட்டை ‘சுத்தம்’ செய்யப் போகிறது என்றால் முதலில் இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையிலான ஒப்பந்தங்களில் உள்ள மோசடிகளை சுத்தம் செய்ய வேண்டும் என முன்னாள் அமைச்சர் பந்துல