இந்நிலையில், ரிஸி சுனக் ஆக்ராவில் உள்ள தாஜ்மகாலுக்கு நேற்று தனது குடும்பத்தினருடன் சென்றார். தாஜ்மகாலைப் பார்வையிட்ட அவர், அங்குள்ள பார்வையாளர் குறிப்பேட்டில் கருத்துகளை பதிவிட்டார்.
ரிஸி சுனக்குடன் அவரது மனைவி அக்ஸதா மூர்த்தி, மகள்கள் மற்றும் மாமியார் சுதா மூர்த்தி ஆகியோரும் வந்திருந்தனர்.
இதுதொடர்பாக, ரிஸி சுனக் கூறுகையில், தாஜ்மகாலைப் போல உலகின் சில இடங்கள் ஒன்றிணைக்க முடியும். இதைப் பார்க்கும் குழந்தைகள் மறக்க மாட்டார்கள். அன்பான விருந்தோம்பலுக்கு நாங்கள் மிகவும் நன்றியுள்ளவர்களாக இருக்கிறோம். எங்கள் முழு குடும்பத்திற்கும் மறக்க முடியாத அனுபவம், நன்றி என தெரிவித்தார்.
முன்னாள் பிரதமர் ரிஸி சுனக் வருகையை முன்னிட்டு உயர்மட்ட பாதுகாப்பு வழங்கப்பட்டது.

