உள்ளூர் முக்கிய செய்திகள்

கணேமுல்ல சஞ்சீவவின் கொலையாளி இராணுவத்தில் இருந்தவர் என்பது உறுதிபடுத்தப்பட்டுள்ளது. மேலும் 2 பொலிஸ் அதிகாரிகள் கைது

எவராக இருப்பினும் பாரபட்சமின்றி சட்டம் அமல்படுத்தப்படும் என பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார்.

காவல்துறை அதிகாரி, இராணுவ அதிகாரி ,குற்றவாளி எனப் பாராமல் அனைவருக்கும் எதிராகச் சட்டம் அமல்படுத்தப்படும் எனக் கூறினார்.

நாடாளுமன்ற அமர்வில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கையில் அவர் இதனைக் குறிப்பிட்டார்.

மித்தெனியவில் அண்மையில் நடந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவத்துடன் தொடர்புடைய காவல்துறை அதிகாரி ஒருவரும், கணேமுல்ல சஞ்சீவ கொலையில் தொடர்புடைய ஒரு காவல்துறை அதிகாரியும் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், அவர்களுக்கு எதிராக எந்த பாகுபாடும் இல்லாமல் சட்டம் அமல்படுத்தப்படும் என்றும் அவர் கூறினார்.

கணேமுல்ல சஞ்சீவவின் கொலை விசாரணையில் தற்போதுள்ள முன்னேற்றங்கள் தொடர்பிலும் அமைச்சர் நாடாளுமன்றில் கருத்துத் தெரிவித்தார்.

சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான சந்தேகநபர் 2019 ஆம் ஆண்டு டிசம்பர் 12 ஆம் திகதி அன்று இலங்கை இராணுவத்தில் இணைந்து கொண்டவர் என அமைச்சர் ஆனந்த விஜேபால குறிப்பிட்டார்.

குறித்த நபர் 2024 மே மாதத்தில் பொது மன்னிப்பின் கீழ் இராணுவத்திலிருந்து விடுவிக்கப்பட்டதாகக் கூறப்படுவதாக அமைச்சர் நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.

இது தொடர்பான உண்மைகளை சரிபார்க்க, இந்த அறிக்கை பனாகொடையில் உள்ள இராணுவ சம்பளப் பிரிவுக்கு அனுப்பப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.

சந்தேக நபர் தப்பிச் சென்ற வேனின் இலக்கத் தகடு போலி எனத் தெரியவந்துள்ளது.

இதேவேளை நுகேகொட குற்றவியல் புலனாய்வு அதிகாரிகள், துப்பாக்கிச் சூட்டு சம்பவத்திற்கு முன்பதாக பிரதான சந்தேகநபரும் அவருக்கு உதவிய பெண்ணும் தங்கியிருந்த விடுதியை ஆய்வு செய்துள்ளனர்.

இந்த சம்பவத்துடன் தொடர்புடைய மகிழுந்து ஒன்றையும் காவல்துறை கைப்பற்றியுள்ளது.

குறித்த விடுதியிலிருந்து புதுக்கடை நீதிமன்றத்திற்கு இவர்களை அழைத்துச் சென்ற மகிழுந்தையே காவல்துறையினர் மீட்டுள்ளனர்.

துப்பாக்கிச் சூட்டு சம்பவத்திற்கு முதல் நாள் குறித்த மகிழுந்தில் வருகை தந்த நபர் ஒருவர் பிரதான சந்தேகநபரிடம் பொதியொன்றை வழங்கியுள்ளமையும் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

உள்ளூர்

ராஜபக்ஷக்களுக்கு எதிரான ஊழல்களின் விசாரணைகள் ஆரம்பிக்கப்ட்டுள்ளது

கடந்த காலத்தில் சர்ச்சைகளை ஏற்படுத்திய ராஜபக்ஷக்களுக்கு எதிரான அனைத்து ஊழல் மற்றும் மோசடி வழக்குகள் தொடர்பான விசாரணைகள் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தேசிய மக்கள் சக்தியின் தேசிய செயற்குழு
உள்ளூர்

முல்லைத்தீவில் வர்த்தக நிலையமொன்று தீக்கிரையானது

முல்லைத்தீவு சிலாவத்தை பகுதியில் கடை ஒன்று எரிந்த சம்பவம் செவ்வாய்க்கிழமை (08) அதிகாலை இடம்பெற்றுள்ளது. முல்லைத்தீவு சிலாவத்தை சந்தைக்கு முன்பாக அமைந்துள்ள பலசரக்கு கடை ஒன்றும் அதனுடன்