மரணதண்டனையை நிறைவேற்றுவது குறித்து அரசாங்கம் ஆராயவில்லை என நீதியமைச்சர் ஹர்சன நாணயக்கார தெரிவித்துள்ளார்.
ஐலண்டிற்கு கருத்து தெரிவித்துள்ள நீதியமைச்சர் மரணதண்டனை நிறைவேற்றம் குறித்து எந்த சூழ்நிலையிலும் அரசாங்கம் ஆராயவில்லை என அமைச்சர் தெரிவித்துள்ளார்.
பாதுகாப்பு அமைச்சராகவும் உள்ள ஜனாதிபதி மரணதண்டனை விதிக்கப்பட்டவர்களிற்கு தண்டனையை நிறைவேற்றுவது ஒரு வழிமுறையில்லை என்பது குறித்து தெளிவாக உள்ளார் என அமைச்சர் தெரிவித்துள்ளார்.
நீதிமன்ற கொலைகயின் பின்னர் இது குறித்து ஆராயவில்லை என அமைச்சர் தெரிவித்துள்ளார்.
தற்போதைய பிரச்சினைக்கு தீர்வை காண்பதற்கு நாங்கள் உறுதியான நடவடிக்கைகளை எடுக்கின்றோம் என தெரிவித்துள்ள நீதியமைச்சர் மூலோபாயம் ஒன்றை வகுப்பதற்கான பேச்சுவார்த்தைகள் இடம்பெறுகின்றன என தெரிவித்துள்ளார்.
நீதிமன்றம் தொடர்ந்தும் மரணதண்டனை தீர்ப்பினை வழங்குகின்ற போதிலும் இலங்கை 1976ம் ஆண்டுமுதல் மரணதண்டனையை நிறைவேற்றுவதை இடைநிறுத்திவைத்துள்ளது.

