பாதாள உலக கும்பலைச் சேர்ந்த ‘கெஹெல்பத்தர பத்மே’என்று அழைக்கப்படும் மன்தினு பத்மசிறி பெரேரா ஹேவத் என்பவரின் மனைவியின் வீட்டை காணொளி எடுத்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட இரண்டு சந்தேக நபர்களை எதிர்வரும் மார்ச் மாதம் 06 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு குளியாப்பிட்டி நீதவான் ரன்திக லக்மாலி நேற்று (27-02-2025) உத்தரவிட்டுள்ளார்.
சந்தேக நபர்கள் இருவரும் நேற்றைய தினம் நீதிமன்றி்ல ஆஜர்படுத்தப்பட்ட போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
சந்தேக நபர்கள் இருவரும் துபாயில் உள்ள ‘சமீர்’ என்பவரின் தலைமையில் ‘கெஹெல்பத்தர பத்மே’வின் மனைவியின் வீட்டை காணொளி எடுத்துள்ளதாக பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.
‘கெஹெல்பத்தர பத்மே’ என்பவரின் மனைவியின் பெற்றோரை கொலை செய்யும் நோக்கத்தில் சந்தேக நபர்கள் இருவரும் குறித்த வீட்டை காணொளி எடுத்துள்ளதாக பொலிஸ் விசாரணையில் மேலும் தெரியவந்துள்ளது.
இது தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

