உள்ளூர் முக்கிய செய்திகள்

புதிய கடவுச்சீட்டிற்கு மேலதிகமாக 7000 ஆயிரம் ரூபா செலவுடப்படுகின்றதென முஜிபுர் எம்.பி குற்றச்சாட்டு

அரசாங்கம் தற்போது விநியோகிக்கும் புதிய வெளிநாட்டு கடவுச்சீட்டில் பாரிய குறைபாடுகள் இருப்பதுடன் பழைய கடவுச்சீட்டுக்கு செலவழித்ததைவிட மேலதிகமாக 6,997 ரூபா செலுத்த வேண்டி இருக்கிறதென முஜிபுர் ரஹ்மான் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் நேற்று (28-02-2025) இடம்பெற்ற 2025ஆம் ஆண்டு வரவு,செலவு திட்டத்தில் பாதுகாப்பு அமைச்சு, பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சு மற்றும் பாராளுமன்ற அலுவல்கள் அமைச்சுகளின் செலவு தலைப்புகளின் மீதான குழுநிலை விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.

அங்கு அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்,

வெளிநாட்டு கடவுச்சீட்டு விநியோகிப்பதில் ஏற்பட்டுள்ள பிரச்சினை இன்றும் தொடர்ந்து வருகிறது.
கடந்த அரசாங்க காலத்தில் இந்தப் பிரச்சினை ஏற்பட்டாலும் அரசாங்கம் ஆட்சிக்கு வந்து 5மாதங்கள் கடந்துள்ளபோதும் இந்தப் பிரச்சினை தொடர்ந்து செல்கிறது.

இந்த பிரச்சினையை தீர்ப்பதற்கு குடிவரவு குடியகல்வு திணைக்கள அதிகாரிகள் பாரிய முயற்சி மேற்கொண்டு வருகின்றார்கள் என்பதை நாங்கள் ஏற்றுக்கொள்கிறோம்.

கடவுச்சீட்டு விநியோக நடவடிக்கை கடந்த 24 வருடங்களாக குறிப்பிட்ட ஒரு நிறுவனமே மேற்கொண்டு வருகிறது.
எந்த கேள்வி கோரலும் இல்லாமலேயே இந்த நடவடிக்கை இடம்பெற்று வருகிறது.
என்றாலும் கடந்த வருடம் மே மாதம் இலத்திரணியல் கடவுச்சீட்டு கொண்டுவர அப்போதைய அரசாங்கம் கேள்விக்கோரல் ஒன்றை மேற்கொண்டிருந்தது.

அதில் 8மாதங்களில் 5மில்லியன் கடவுச்சீட்டு இலத்திரனியல் கடவுச்சீட்டு வழங்க வேண்டும் என்ற நிபந்தனையுடன் ஒரு நிறுவனம் ஒப்பந்தம் செய்கிறது.
என்றாலும் குறித்த நிறுவனம் 5மில்லியன் கடவுச்சீட்டுக்களையும் 2025 ஜுன் மாதத்திலேயே வழங்க முடியும் என தெரிவித்திருந்தது.

அரசாங்கம் தெரிவித்துள்ள காலப்பகுதியில் 71ஃ2 இலட்சம் வழங்க முடியும் என குறித்த நிறுவனம் தெரிவித்திருந்தது.
அதன் பிரகாரம் அமைச்சரவையி்ன் அனுமதியுடன் இந்த நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டது.

இதுவரை காலமும் கடவுச்சீட்டு ஒன்றுக்கு அரசாங்கத்துக்கு 1926 ரூபாவே செலவாகியது.
அதேநேரம் இதற்கு முன்னர் இருந்த நிறுவனமே கடவுச்சீட்டில் இருக்கும் தனிப்பட்ட தகவல்கள் அடங்கிய பக்கத்தை தயாரித்து வருகிறது.
அதற்காக அரசாங்கம் 1.45 டொலர் வழங்குகிறது.

கடவுச்சீட்டு விநியோகிப்பதற்கு புதிய நிறுவனத்துக்கு 4.97 டொலரை வழங்குகிறது.
அப்படியானால் எமது கடவுச்சீட்டு தயாரிப்பை இரண்டு கம்பனிகள் மேற்கொண்டு வருகின்றன.

இதனால் அரசாங்கம் 53 சதம் டொலரை மேலதிகமாக செலுத்தி வருகிறது.
அதாவது 7அரை இலட்சம் கடவுச்சீட்டுகளுக்கு அரசாங்கம் மேலதிகமாக 3இலட்சத்தி 97ஆயிரம் அமெரிக்க டொலர்களை செலுத்த வேண்டி இருக்கிறது.
அதாவது 1190 இலட்சம் அரசாங்கத்துக்கு நட்டமாகிறது.

அத்துடன் ஆரம்ப காலத்தில் சிவப்பு நிர கடவுச்சீட்டை பெற்றுக்கொள்ள நாங்கள் 20ஆயிரம் ரூபா செலுத்தி வந்தோம்.
அதில்64 பக்கங்கள் இருக்கின்றன. ஆனால் நீல நிரத்தில் விநியோகிக்கப்படும் புதிய கடவுச்சீட்டில் 48 பக்கங்களே இருக்கின்றன.
16 பக்கங்கள் குறைவு. அதற்கும் மக்கள் 20ஆயிரம் ரூபா செலுத்த வேண்டி இருக்கிறது.

அதன் பிரகாரம் எமது மக்கள் புதிய கடவுச்சீட்டுக்காக 6697ரூபா மேலதிகமாக செலுத்த வேண்டி இருக்கிறது.
இந்த பிரச்சினைக்கும் அரசாங்கத்தினால் தீர்க்க முடியாமல் இருக்கிறது.

இந்தியாவில் கடவுச்சீட்டு ஒன்றை விநியோகிக்க 13,560 ரூபா அறவிடப்படுகிறது.
அதில் 60 பக்கங்கள் இருக்கின்றன.
பங்களாதேஷில் இலத்திரணியல் கடவுச்சீட்டே விநியோகிக்கப்படுகின்றன.
அதில் 65 பக்கங்கள் இருக்கின்றன. 10 வருடம் செல்லுபடி காலம். 3,885 ரூபா அறவிடப்படுகிறது.
பாகிஸ்தானில் 12ஆயிரம் ரூபா அறவிடப்படுகிறது.
100 பக்கங்கள் இருக்கின்றன.
5 வருட செல்லுபடியான காலம் இருக்கிறது.
ஒருநாள் சேவைக்கே இவ்வாறு அறவிடப்படுகிறது.

எமது கடவுச்சீடே வெளிநாடுகளில் எமது நாட்டின் கௌரவம் தங்கியிருக்கிறது.
ஆனால் புதிய கடவுச்சீட்டில் 30 மற்றும் 31ஆம் பக்கங்களில் ஆங்கிலத்தில் எழுதப்பட்டிருக்கும் பெயர்களில் எழுத்து பிழை இருக்கிறது.
இதனைக்கூட அவதானிக்காமல் இந்த கடவுச்சீட்டு அச்சிடப்பட்டிருக்கிறது.
பழைய கடவுச்சீட்டில் முதலாம் பக்கத்தில் பாதுகாப்பு இலக்கம் பொறிக்கப்பட்டிருக்கிறது.
அது அச்சிடப்படும்போதே அந்த இலக்கம் அச்சிடப்பட்டு வருகிறது.
ஆனால் புதிய கடவுச்சீட்டில் அந்த பாதுகாப்பு இலக்கம் கடவுச்சீட்டின் தனிப்பட்ட தகவல் அடங்கி இருக்கும் பக்கத்திலேயே இருக்கிறது.

அதனால் குறித்த பக்கத்தை மாற்றியமைத்து யாருக்கு வேண்டுமானாலும் மோசடிகளில் ஈடுபட இடமிருக்கிறது.
இது பாரிய பிரச்சினை. இதுதொடர்பில் யாராவது நீதிமன்றம் சென்றால், அரசாங்கத்துக்கு இந்த கடவுச்சீட்டுக்களை நீக்க வேண்டிவரும்.

இவ்வாறு இன்னும் பல குறைபாடுகள் புதிய கடவுச்சீட்டில் காணப்படுகின்றன.
கடந்த அரசாங்கம்தான் இந்தனை மேற்கொண்டாலும் அரசாங்கம் ஆட்சிக்கு வந்து 5மாதமாகியும் இந்த தவறிகளை கண்டறிந்து திருத்த முடியாமல் போயிருக்கிறது என்றார்.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

உள்ளூர்

ராஜபக்ஷக்களுக்கு எதிரான ஊழல்களின் விசாரணைகள் ஆரம்பிக்கப்ட்டுள்ளது

கடந்த காலத்தில் சர்ச்சைகளை ஏற்படுத்திய ராஜபக்ஷக்களுக்கு எதிரான அனைத்து ஊழல் மற்றும் மோசடி வழக்குகள் தொடர்பான விசாரணைகள் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தேசிய மக்கள் சக்தியின் தேசிய செயற்குழு
உள்ளூர்

முல்லைத்தீவில் வர்த்தக நிலையமொன்று தீக்கிரையானது

முல்லைத்தீவு சிலாவத்தை பகுதியில் கடை ஒன்று எரிந்த சம்பவம் செவ்வாய்க்கிழமை (08) அதிகாலை இடம்பெற்றுள்ளது. முல்லைத்தீவு சிலாவத்தை சந்தைக்கு முன்பாக அமைந்துள்ள பலசரக்கு கடை ஒன்றும் அதனுடன்