பாதாள உலக கும்பலைச் சேர்ந்த ‘கணேமுல்ல சஞ்சீவ’ என அழைக்கப்படும் சஞ்சீவ குமார சமரத்ன என்பவர் கொழும்பு புதுக்கடை நீதிமன்றத்துக்குள் வைத்து கடந்த 19 ஆம் திகதி சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய மேலும் இரண்டு சந்தேக நபர்களை கொழும்பு பொலிஸ் குற்றத் தடுப்பு பிரிவு நேற்று (28-02-2025) கைது செய்துள்ளனர்
கொழும்பு பொலிஸ் குற்றத் தடுப்பு பிரிவினருக்கு கிடைத்த தகவலின் பேரில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் சந்தேக நபர்கள் மினுவாங்கொடை பிரதேசத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர்.
‘கணேமுல்ல சஞ்சீவ’வை படுகொலை செய்வதற்கு சந்தேக நபர்களுக்கு சிம் அட்டைகளை வழங்கி உதவியதாக சந்தேகிக்கப்படும் மினுவாங்கொட பிரதேசத்தைச் சேர்ந்த உதார நிர்மல் குணரத்ன என்ற 28 வயதுடைய நபரும், மினுவாங்கொட வீதி, துனகஹ பகுதியைச் சேர்ந்த நளின் துஷ்யந்த என்ற 31 வயதுடைய நபருமே கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதன்படி, ‘கணேமுல்ல சஞ்சீவ’வின் படுகொலை தொடர்பில் இதுவரை 12 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை கொழும்பு பொலிஸ் குற்றத் தடுப்பு பிரிவினர் மேற்கொண்டு வருகின்றனர்.

