உள்ளூர் முக்கிய செய்திகள்

கணிதம் மற்றும் விஞ்ஞான துறையில் தமிழ் மாணவர்களின் ஆர்வம் குறைவடைந்து வருகின்றதென்கிறார் பேராசிரியர் சசிகேஷ்

கணித விஞ்ஞான துறையில் தமிழ் மாணவர்களின் எண்ணிக்கை குறைவடைந்து செல்கிறது என யாழ்.பல்கலைக்கழக இரசாயனவியல் துறைப் பேராசிரியர் க.சசிகேஷ் தெரிவித்தார்.

சட்டத்தரணி செல்வஸ்கந்தனால் மாகாண மட்டத்தில் நடத்தப்பட்ட மகாஜனன் கணித விஞ்ஞான திறன்காண் போட்டிப்பரீட்சையில் வெற்றியீட்டிய மாணவர்களுக்கான பரிசில் வழங்கும் நிகழ்வு நேற்று (15-03) தெல்லிப்பழை மகாஜனக் கல்லூரியின் பாவலர் துரையப்பாப்பிள்ளை மண்டபத்தில் நடைற்றது.

இந்நிகழ்வில் பிரதம விருந்தினராக கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

கணித விஞ்ஞான துறையில் தமிழ் மாணவர்களின் எண்ணிக்கை குறைவடைந்து செல்கிறது.
இது கவலையான விடயமாக உள்ளது.
கணித விஞ்ஞான துறையில் மாணவர்கள் தெரிவு செய்வது குறைவதாக குற்றச்சாட்டுகளும் முன்வைக்கப்படுகிறது.
சில தவறான கண்ணோட்டமோ தவறான புரிதலோ என்பது புரியாதுள்ளது.

கணித விஞ்ஞான துறைகளை விட கலைத்துறையில் வேலைகளை பெற்றுக்கொள்ளலாம் என்ற நிலையும் காணப்படுகிறது.
ஆனால் கணித விஞ்ஞான துறையில் வேலை இல்லை என்று கூறுவதில்லை.

படித்து முடிந்த கையோடு ஆக குறைந்தது. ஒரு வருடம் காத்திருக்க வேண்டிவரும் அதற்குள் உள்நாட்டிலோ வெளிநாட்டிலோ வேலை கிடைத்துவிடும் அல்லது மேற்படிப்புக்கு செல்லலாம்.

கணித, விஞ்ஞான துறைக்கு தற்போதும் ஆசிரியர்கள் பற்றாகுறையாகவே உள்ளது.
மாணவர்களை பெற்றோர், ஆசிரியர்கள் சரியான முறையில் தெளிவுபடுத்தல்களை, தயார்படுத்தல்களை செய்தால் அந்த துறையில் மாணவர்களை முன்னேற்றமடைய செய்யலாம்.

எனைய துறையைப்போல் வேலையில்லா போராட்டம் வேலையில்லா பிரச்சினைக்குள் சிக்குப் படதேவையில்லை என்பது எனது கருத்தாகும்.

கணித விஞ்ஞான துறையின் முக்கியத்துவத்தை உணர்ந்தே சட்டத்தரணி இ. செல்வஸ்கந்தனால் மாகாண மட்டத்தில் மகாஜனன் கணித விஞ்ஞான திறன்காண் போட்டிப்பரீட்சையை நீண்டகாலமாக நடாத்திவருகிறார். அரசாங்கமும் இந்த துறையை ஊக்கப்படுத்திவருகிறது.

தற்போது இப்போட்டியில் பலமாணவர்கள் பங்குபற்றிவருகிறார்கள் என்பது பாராட்டுதலுக்குரியது.
இது தொடரவேண்டும். இதேவேளை பல்கலைக்கழகங்களுடாகவோ அல்லது வேறு நிறுவனங்களுடாககவோ புத்தாக்க போட்டிகள் இடம்பெற்றுவருகின்றன.
அவற்றிலும் மாணவர்களை ஊக்கத்தோடு பங்குபற்றவைக்க வேண்டும்.

சில் புத்தாக்க போட்டிகளில் ஒரு சில பாடசாலைகளே பங்குபற்றுகின்றன கிரமங்களில் உள்ள பாடசாலைகள் இத்தகைய போட்டிகளில் பங்குபற்றுவது குறைவாகவுள்ளன குறிப்பாக தேசிய ரீதியில் நடைபெறும் போட்டிகளில் பங்குபற்றுவது குறைவாகவுள்ளது.

இத்தகைய போட்டிகளில் பங்குபற்றுவதற்கு தடைகள் காணப்பட்டால் ஏற்பாட்டளர்களுடன் தொடர்பு கொண்டு அவற்றை சீர்செய்து கொள்ளலாம்.

தற்போதைய சூழலில் குறிப்பாக 2009 ஆண்டு யுத்தத்திற்கு பின்னரான சூழலில் யாழ் பல்கலைக்கழகத்தில் கணித விஞ்ஞான தூறையில் 65 வீதமனா மாணவர்கள் தென்னிலங்கையை சேர்ந்த மாணவர்களே கல்வி கற்கிறார்கள். தமிழ் மாணவர்களின் வீதம் குறைந்துகொண்டு செல்கிறது என்றார்.

 

 

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

உள்ளூர்

ராஜபக்ஷக்களுக்கு எதிரான ஊழல்களின் விசாரணைகள் ஆரம்பிக்கப்ட்டுள்ளது

கடந்த காலத்தில் சர்ச்சைகளை ஏற்படுத்திய ராஜபக்ஷக்களுக்கு எதிரான அனைத்து ஊழல் மற்றும் மோசடி வழக்குகள் தொடர்பான விசாரணைகள் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தேசிய மக்கள் சக்தியின் தேசிய செயற்குழு
உள்ளூர்

முல்லைத்தீவில் வர்த்தக நிலையமொன்று தீக்கிரையானது

முல்லைத்தீவு சிலாவத்தை பகுதியில் கடை ஒன்று எரிந்த சம்பவம் செவ்வாய்க்கிழமை (08) அதிகாலை இடம்பெற்றுள்ளது. முல்லைத்தீவு சிலாவத்தை சந்தைக்கு முன்பாக அமைந்துள்ள பலசரக்கு கடை ஒன்றும் அதனுடன்