திருகோணமலை மேல் நீதிமன்ற நீதிபதி அன்னலிங்கம் பிரேமசங்கர் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவால் மேன்முறையீட்டு நீதிமன்ற நீதியரசராக பதவி உயர்வு பெற்றதை அடுத்து திருகோணமலை மாவட்ட சட்டத்தரணிகள் சங்கத்தினரால் கௌரவிக்கப்பட்டார்.
கௌரவிப்பு நிகழ்வு சனிக்கிழமை (15-03) திருகோணமலையில் இடம் பெற்றது.
குறித்த பதவி உயர்வினை ஜனாதிபதியால் கடந்த செவ்வாய்க்கிழமை (11-03) வழங்கப்பட்டிருந்தது.
குறித்த கௌரவிப்பு நிகழ்வில் ஜனாதிபதி சட்டத்தரணிகளான எம்.ஏ.சுமந்திரன், ஏ.டபிள்யூ அப்துல் சத்தார் உட்பட சட்டத்தரணிகள் என பலரும் கலந்து கொண்டனர்.

